உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில்  சட்டவிரோதமாக 223 வெளிநாட்டினர்

பெங்களூரில்  சட்டவிரோதமாக 223 வெளிநாட்டினர்

பெங்களூரு; ''வெளிநாட்டினர் 223 பேர், பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர்,'' என, சட்டசபையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.சட்டசபையில் லிங்கசுகுர் பா.ஜ., உறுப்பினர் மானப்பா வஜ்ஜல் கேட்ட கேள்விக்கு, உள்துறை அமைச்சர் அளித்த பதில்:மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில், சட்டவிரோதமாக வசித்த 556 வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பெங்களூரில் 223 பேர், தங்கவயலில் 7; மங்களூரு நகரில் 41; ராம்நகரில் 11; தார்வாடில் 2; விஜயபுராவில் 33; தட்சிண கன்னடாவில் 15; உத்தர கன்னடா, ராய்ச்சூரில் தலா ஒருவர்; உடுப்பியில் 10; ஷிவமொக்காவில் 12; ஹாசனில் 3; சித்ரதுர்காவில் 10; பெங்களூரு மாவட்டத்தில் 60 பேர் மற்றும் சில மாவட்டங்களில் வேறு சிலரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அடையாளம் காண, அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டினர் வசிக்கும் இடங்களுக்கு அருகில் ஆயுதப்படையினரை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.சட்டவிரோதமாக வசிப்பவர்களை அவர்களின் நாடுகளுக்கு கடத்தவும், வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளோம். இதுவரை 193 பேரை நாடு கடத்தி உள்ளோம். 212 பேரை நாடு கடத்தும் பணி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கஞ்சா, அபின்

இந்த பதிலில் திருப்தி அடையாத மானப்பா வஜ்ஜல், ''விஜயபுரா மாவட்டத்தில் மட்டும் 15,000 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக வசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும்போது மாநிலத்தின் லட்சக்கணக்கில் வெளிநாட்டினர் இருக்கலாம். அவர்களுக்கு ஆதார், வாக்காளர், ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. வாலிபர்களுக்கு கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் வழங்கி வெளிநாட்டினர் தவறாக வழிநடத்துகின்றனர்,'' என்றார்.அப்போது குறுக்கிட்ட பா.ஜ., சுனில்குமார், ''சட்டவிரோதமாக இங்கு வசிப்பவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். வங்கதேசத்தினர் காபி எஸ்டேட்டுகளில் வேலை செய்கின்றனர். இது ஒரு தீவிரமான விஷயம்,'' என்றார்.

அரைமணி நேரம்

எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுகையில், ''சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரால் பெங்களூரில் நிறைய பிரச்னை உள்ளது. ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள், போலீஸ்காரர்களை தாக்குகின்றனர். வங்கதேசத்தினர் இங்கு சட்டவிரோதமாக வருவதன் பின்னணியில் பெரிய வலையமைப்பு உள்ளது. இதுபற்றி விவாதிக்க அரைமணி நேரம் வேண்டும்,'' என்றார்.இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் காதர், அரைமணி நேர விவாதத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kumar Kumzi
மார் 12, 2025 15:33

இந்த அனைவருமே பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளாக இருப்பானுங்க எல்லோரையும் உதைத்து விரட்டுங்கள்


முக்கிய வீடியோ