மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
பெங்களூரு: பெண்கள் பாதுகாப்புக்காக போக்குவரத்து துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக ஓலா, ஊபர் மற்றும் பொது வாகனங்களில், பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல், விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மாநில போக்குவரத்து துறை முன்வந்துள்ளது. அதற்காக புதிதாக 24 மணி நேரமும் செயல்படுக்கூடிய உதவி மையத்தை, துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.முந்தைய பா.ஜ., ஆட்சியில் பெண் பயணியரின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., பஸ்களில், 'பேனிக் பட்டன்' அமைப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது திறக்கப்பட்டுள்ள மையம் மூலம், பஸ்சில் அவசர பட்டனை அழுத்தினால், கண்காணிப்பு கேமராவுடன் சைரனும் ஆன் செய்யப்படும். பட்டனை அழுத்தியவுடன், பஸ் பற்றிய முழு தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். மேலும் பஸ் நடத்துனர், ஓட்டுனருக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு வரும். இதன் மூலம் பஸ்சில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.பஸ்கள் மட்டுமின்றி, மெட்ரோ ரயில்களிலும் பெண் பயணியரின் பாதுகாப்புக்காக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13