உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவுக்குள் நுழையும் 280 புதுமுக எம்.பி.,க்கள்

லோக்சபாவுக்குள் நுழையும் 280 புதுமுக எம்.பி.,க்கள்

புதுடில்லி : புதிதாக அமைய உள்ள, 18வது லோக்சபாவில், 280 புதுமுகங்கள் இடம்பெற உள்ளனர். லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து, பி.ஆர்.எஸ்., ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாவது:புதிதாக அமையவுள்ள, 18வது லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ள, 280 பேர் முதல் முறை எம்.பி.,க்களாவர். கடந்த 2019 தேர்தலின்போது, 267 புதுமுக எம்.பி.,க்கள் இருந்தனர்.ஏற்கனவே எம்.பி.,யாக இருந்த, 263 பேர், தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளனர். இதைத் தவிர, 16 பேர் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தனர்.ஒருவர், ஏழு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். மீண்டும் தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில், எட்டு பேர் தங்களுடைய தொகுதியை மாற்றியுஉள்ளனர். ஒருவர், இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளார்.கடந்த 17வது லோக்சபாவில் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் எம்.பி.,யாக இருந்த ஒன்பது பேர் தற்போது வேறு கட்சியின் சார்பில் நுழைகின்றனர். மேலும், எட்டு பேர், பிளவுபட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மத்திய அமைச்சர்களில், 53 பேரில், 35 பேர் வென்றுள்ளனர்.புதிய லோக்சபாவில், 240 எம்.பி.,க்களுடன் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உள்ளது. அதற்கடுத்து, 99 பேருடன் காங்., இரண்டாம் இடத்தில் உள்ளது. சமாஜ்வாதி, 37 பேருடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2019 தேர்தலில், 36 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.பி.,க்களாக இருந்தனர். தற்போது, அது, 41 கட்சிகளாக உயர்ந்துள்ளது.தேசிய கட்சிகளைச் சேர்ந்த, 346 பேர் எம்.பி.,யாக தேர்வாகியுள்ளனர். இது மொத்த எம்.பி.,க்களில், 64 சதவீதமாகும். அங்கீகாரம் பெற்றுள்ள மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த, 179 பேர் தேர்வாகியுள்ளனர். இது, 33 சதவீதமாகும். அங்கீகாரம் பெறாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 11 பேர். ஏழு பேர் சுயேச்சைகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

46 சதவீதம் பேர் மீது வழக்கு

லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2009 தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2024 தேர்தலில் பங்கேற்ற கட்சிகளின் எண்ணிக்கை, 104 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2009ல் 368, 2014ல் 464, 2019ல் 677, இந்தத் தேர்தலில், 751 கட்சிகள் பங்கேற்றன.லோக்சபா தேர்தலில், 543 தொகுதிகளுக்கு தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில், 251 பேர், அதாவது, 46 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில், 27 பேர் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள். இதுவே, 2019ல் 233, 2014ல் 185, 2009ல் 162, 2004ல் 125 எம்.பி.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
ஜூன் 07, 2024 11:21

மகிஷ்ச்சி அதே நேரத்தில் ஒரு வருத்தம் காவல் துறையில் பணியில் சேரும்போது இருக்கும் புத்துணர்ச்சி பணியில் சேர்ந்த பிறகுதான் அவர்களுக்கு ஜனநாயகம் என்றால் கண்ணால் பார்த்தல் கூட நடவடிக்கை எடுக்கக்கூடாது, தவறு செய்தவர்களை கண்டிக்கவோ அடிக்கவோ கூடாது, அவர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும், நல்லவர்கள் பாதிக்கப்பட்டால் வருத்தப்படலாமே தவிர அவர்களுக்காக உணர்ச்சி வசப்பட்டு, தவறு செய்பவர்களை தண்டிக்கவோ, கண்டிக்கவோ கூடாது என்று அறிந்த பின்பு ஊரோடு ஓதுவாழவேண்டிய ஒரு நிலை, அதே போன்று , இந்த இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்யவந்தவர்கள் , மூன்று தலைமுறையாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் போல் தொடர்நடபு மக்களுக்காக பணியாற்றும் மற்றவர்களைப்போல் இல்லாமல் தனித்து இயங்கினால் நன்றாக இருக்கும். இதை நான் கூறுவதை விட, எங்கள் மூத்த அமைச்சர் திரு துறை முருகன் ஐயா சிரிக்கவும், சிந்திக்கவும்க் படி மிக அழகாக கூறிய வீடியோ யு டியூபில் இருக்கிறது . அதில் அவர் கூறியது, ஒன்று ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் இல்லையென்றால் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் . இரண்டும் இல்லாமல் பாராளுமன்றத்துக்கு சென்றால் , அங்கு அவர்கள் பேசுவது ஒன்றுமே புரியாது, ஆகவே இவர்கள் அருகாமையில் இருப்பவர்களிடம், இந்த வெள்ளைக்காரன் இந்த கட்டிடத்தை எப்படி காட்டியிருக்கிறேன் என்று கட்டிடத்தின் அழகை இரசித்தவண்ணம், பேசி மகிழத்தல், அடுத்து வெளியே டீ குடிக்க எழுவது, அதன் பிறகு ஊரில் போன் வரும், அப்படியா நான் நாளைக்கு ஊருக்கு வருகிறேன் என்று கூறி ஊருக்கு செல்வார்கள் என்று . அதில் எவ்வளவு கருத்துக்கள் பொதிந்து உள்ளது என்பதை நாம் அறியவேண்டும் . வந்தே மாதரம்


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 06:16

வெறும் 44 என்று இருந்தபொழுதே கூட பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுத்தவர்கள் இப்பொழுது நிச்சயம் நடக்க விட மாட்டார்கள். ஆகவே ஆட்டம் போட்டால் அடக்கிவைக்க தயங்கவே கூடாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை