மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7
புனே மஹாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சுகவ் கிராமத்தில், பிரவரா ஆற்றில் நேற்று முன்தினம் இளைஞர் உட்பட இருவர் குளிக்கச் சென்றனர். அப்போது நீரில் மூழ்கி ஒருவர் பலியானார். மாயமான மற்றொருவரை தேடும் பணி நடந்தது.மாநில பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த நான்கு போலீசார் மற்றும் உள்ளூர்வாசி என ஐந்து பேர் நேற்று படகில் சென்று ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், போலீஸ்காரர் ஒருவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். மூன்று போலீசார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படகில் சென்ற உள்ளூர்வாசி மாயமானார். அவரையும், முதல்நாளில் நீரில் மூழ்கிய நபரையும் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 7