உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து உ.பி.,யில் 6 பேர் பலி

3 மாடி கட்டடம் இடிந்து விபத்து உ.பி.,யில் 6 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். உ.பி.,யின் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் மூன்று மாடி கட்டடம் உள்ளது. கிடங்காக பயன்படுத்தப்படும் இந்த கட்டடத்தில் கட்டுமானப் பணி நடந்து வந்தது. இந்த பணியில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை திடீரென அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளுக்குள் வேறு யாராவது சிக்கியுள்ளனரா என தேடும் பணி தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ