உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்; வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவு

டில்லி பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்; வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவு

புதுடில்லி: ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் மழைநீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.டில்லி ராஜேந்திர நகர், ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டட அடித்தளத்தில் வெள்ளம் புகுந்ததில் மூன்று மாணவர்கள் பலியாகினர்; இது தொடர்பாக, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 02) நீதிபதிகள், மன்மோகன் மற்றும் தூஷர் ராவ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

முழுமையான விசாரணை

வெள்ள நீர் தடுப்பு, மழை நீர் வடிகால் பணியில் அரசு ஊழியர்கள் ஊழல் செய்து இருக்கலாம். சரியான நேரத்தில் முழுமையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இதனை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்பார்வை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
ஆக 02, 2024 21:59

மாணவர்கள் உயிரை காவு வாங்கியது மனவேதனை அளிக்கிறது... இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை