| ADDED : மே 26, 2024 12:57 AM
பிஜப்பூர், சத்தீஸ்கரில் இரு பெண்கள் உட்பட, 33 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூர் நக்சல் குழுவை சேர்ந்த சேர்ந்த இரு பெண்கள் உட்பட 33 நக்சலைட்கள், நேற்று மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன் சரணடைந்தனர்.இதில், போலீசாரை தாக்கியதாக தேடப்பட்டு வந்த மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ராஜு ஹேம்லா, சமோ கர்மா ஆகியோரை பிடித்து கொடுப்பவர்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், புரட்சி குழுவை சேர்ந்த சுத்ரு புனேம் தலைக்கு 1 லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டிருந்தது.பழங்குடியினர் மீதான நக்சலைட்களின் தாக்குதலால் அதிருப்தியடைந்த இவர்கள், நக்சலைட்களின் வெற்று சித்தாந்தத்தை வெறுத்து போலீசில் சரண் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.“சரணடைந்த நக்சலைட்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரணமும், அரசு கொள்கையின் படி புனர்வாழ்வும் அளிக்கப்படும்,” என்று பிஜப்பூர் போலீஸ் எஸ்.பி., ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார்.'சரணடைந்த 33 பேரையும் சேர்த்து, பிஜப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, 109 நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு சரணடைந்து உள்ளனர்; 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றும் அவர் தெரிவித்தார்.