உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 நாள் முதல் ராணுவ சினெர்ஜியா மாநாடு துவக்கம்

3 நாள் முதல் ராணுவ சினெர்ஜியா மாநாடு துவக்கம்

பெங்களூரு : பெங்களூரில் நடக்கும் முதல் தென்னக ராணுவ சினெர்ஜியா மாநாட்டில், தெற்கு கமாண்டிங் லெப்டினெட் ஜெனரல் ஏ.கே.சிங் துவக்கிவைத்து பார்வையிட்டார்.பெங்களூரு ஏ.எஸ்.சி., கல்லுாரி மற்றும் மையத்தில் நேற்று தக் ஷின் பாரத் பகுதி சார்பில் முதல் தென்னக ராணுவ சினெர்ஜியா மாநாடு, லெப்டினெட் ஜெனரல் கே.எஸ்.பிரார் தலைமையில் நடந்தது.இதில், ஆயுதப்படை மூத்த அதிகாரிகள், கல்வி துறை, தொழிற் துறையை சேர்ந்த முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் ராமையா பல்கலைக்கழகம், கிறிஸ்ட் பல்கலைக்கழகம் என 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சியப்படுத்தி உள்ளன.லெப்டினெட் ஜெனரல் ஏ.கே.சிங் பேசுகையில், ''நாட்டின் தெற்கு பகுதியான பெங்களூரில் பாதுகாப்பு உற்பத்திக்கான சூழலை அமைத்து உள்ளது,'' என்றார்.இந்த மாநாடு நாளை வரை நடக்கிறது.9_DMR_0010தக் ஷின் பாரத் பகுதி சார்பில் முதல் தென்னக ராணுவ சினெர்ஜியா மாநாட்டை, தெற்கு கமாண்டிங் லெப்டினெட் ஜெனரல் ஏ.கே.சிங் துவக்கிவைத்து பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ