பெங்களூரு:கர்நாடகாவின் ஒன்பது லோக்சபா தொகுதிகளில், நோட்டாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இது அரசியல் கட்சிகள் மீது, வாக்காளர்களுக்கு உள்ள வெறுப்பை காண்பிக்கிறது. இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு, மக்கள் பாடம் புகட்டினர்.சமீப ஆண்டுகளாக, தேர்தல்களில் ஓட்டுப் போடுவதில், மக்கள் ஆர்வம் காண்பிப்பது இல்லை. ஓட்டுப் போட கிடைக்கும் விடுமுறையை, சுற்றுலா செல்ல பயன்படுத்துவோரே அதிகம். ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் பாடாதபாடுபடுகிறது. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லை. பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களிலேயே, ஓட்டுப் போடுவதில் வாக்காளர்கள் அக்கறை காண்பிப்பது இல்லை.மக்களின் ஆர்வமின்மைக்கு, அரசியல் கட்சிகளின் செயலே காரணம். ஊழல் குற்றசாட்டை சுமந்தவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள். வழக்கை எதிர்கொண்டவர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றாதவர்களுக்கு, அரசியல் கட்சிகள் சீட் கொடுக்கின்றன. இத்தகைய வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், சமுதாயத்துக்கு எந்த பயனும் இல்லை.வேட்பாளர்கள் தகுதியற்றவர்களாக இருப்பதால், வாக்காளர்கள் ஓட்டுப் போட முன்வருவது இல்லை. ஓட்டுச்சாவடிக்கு செல்வது இல்லை. ஓட்டு சதவீதமும் குறைகிறது. தற்போது யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லாத வாக்காளர்களுக்காக, 'நோட்டா' நடைமுறை வந்துள்ளது.விருப்பமான வேட்பாளர் யாரும் இல்லை எனத் தோன்றினால், 'நோட்டா'வுக்கு ஓட்டுப்போடலாம்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, 2013ல் 'நோட்டா'வுக்கு ஓட்டுப்போடும் நடைமுறையை, மத்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அன்று முதல் 'நோட்டா பூதம்' அரசியல் கட்சிகளை அச்சுறுத்துகிறது.வேட்பாளர்கள் யாரும் தகுதியானவர்கள் இல்லை என்றாலோ யாருக்கும் ஓட்டுப் போட விரும்பவில்லை என்றாலோ, 'நோட்டா'வில் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் பதிவாகின்றன.கடந்த 2023 சட்டசபை தேர்தலில், பல வேட்பாளர்களின் வெற்றிக்கு, நோட்டா வேட்டு வைத்தது.அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக நடந்தது. ஜூன் 4ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த ஓட்டுப்பதிவு தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.மாநிலத்தின் ஒன்பது தொகுதிகளில், 'நோட்டா', மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.இம்முறை லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் பல தொகுதிகளில் 'நோட்டா'வில் அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. பெங்களூரு ரூரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களுரு சென்ட்ரல், உடுப்பி - சிக்கமகளூரு, பல்லாரி, தட்சிண கன்னடா, ஹாவேரி, ராய்ச்சூர் ஆகிய தொகுதிகளில், 'நோட்டா'வுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.உத்தரகன்னடா, பெலகாவி, விஜயபுரா, சிக்கபல்லாபூர், தார்வாட், கலபுரகி, கோலார், மாண்டியா, மைசூரு, ஷிவமொகா, துமகூரு ஆகிய லோக்சபா தொகுதிகளில், 'நோட்டா' நான்காவது இடத்தை பிடித்துள்ளது.பாகல்கோட், சித்ரதுர்கா ஆகிய தொகுதிகளில் 'நோட்டா' ஐந்தாவது இடத்தில் உள்ளது.ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கு பதிவாகும் ஓட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பது, அரசியல் கட்சிகள் மீது, வாக்காளர்களுக்கு உள்ள வெறுப்பை காண்பிக்கிறது.தகுதியற்ற வேட்பாளர்களுக்கு, சரியான பாடம் புகட்டியுள்ளது. எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
தொகுதி வாரியான 'நோட்டா' ஓட்டு விபரம்:
தொகுதி நோட்டா சதவீதம்தட்சிண கன்னடா 23,576 1.7பெங்களூரு சென்ட்ரல் 12,126 0.9உடுப்பி -சிக்கமகளூரு 11,269 0.9ஹாவேரி 10,865 0.8ராய்ச்சூர் 9,850 0.8பெங்களூரு வடக்கு 13,554 0.8பல்லாரி 7,889 0.6பெங்களூரு தெற்கு 7,857 0.6பெங்களூரு ரூரல் 10,649 0.5