உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது; 4 பெட்டிகள் தடம் புரண்டன!

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது; 4 பெட்டிகள் தடம் புரண்டன!

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 4 பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகளை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றனர்.மேற்குவங்க மாநிலம் ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் - சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்து பயணிகளை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய ரயில்கள் தாமத‍மாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கவலை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை