உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்..பி.யாக பதவியேற்க அம்ரித்பால் சிங்கிற்கு 4 நாள் பரோல்

எம்..பி.யாக பதவியேற்க அம்ரித்பால் சிங்கிற்கு 4 நாள் பரோல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ்: சிறையில் இருந்து கொண்டே சுயேட்சை எம்.பி.,யாக வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால்சிங் எம்.பி., யாக பதவியேற்க 4 நாள் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருப்பவர் அம்ரித்பால்சிங் 'பஞ்சாப் வாரியர்ஸ்' என்ற அமைப்பை வைத்துக்கொண்டு 2023-ம் ஆண்டு பயங்கர ஆயுதங்கள், நவீன துப்பாக்கிகளுடன் போலீ்ஸ் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை மிரட்டிய வழக்கில் 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் குல்பிர்சிங்ஜிரா 1 லட்சத்து 96 ஆயிரத்து 279 வாக்குகள் பெற்றார். இதையடுத்து 1 லட்சத்து 72 ஆயிரத்து 281 வாக்குகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளரை தோற்கடித்தார்.இந்நிலையில் எம்.பி.யாக பதவியேற்க வேண்டி பரோல் கோரி விண்ணப்பித்த நிலையில் இவரது மனு சபாநாயகரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அம்ரித்பால் சிங்கிற்கு வரும் 5-ம் தேதி முதல் 4 நாட்கள் கடும் நிபந்தனைகளுடன் பரோல் வழங்கி உத்தரவிடப்படடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் நான்கு நாட்களில ஏதேனும் ஒருநாளில் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா எம்.பி., தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பயங்கரவாதி ஷேக் அப்துல்லா ரஷீத் வரும் 6-ம் தேதி ( சனிக்கிழமை) பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
ஜூலை 03, 2024 21:17

அரசு அலுவலகங்களில் சேர கீழ்நிலை பதவியாக இருந்தாலும் நன்னடத்தை, மருத்துவ, வயது சான்றுகள் அவசியம். முக்கிய பதவிக்கு குற்ற வழக்கு இருக்க முடியாது? காங்கிரஸ் வகுத்த அரசியல் சாசனம் உலகம் வியக்கும் படி உள்ளது. இவ்வளவு சகிப்பு தன்மை உலகில் இந்தியா தவிர எங்கும் காண முடியாது. வாக்களர்களில் நல்லவர், கெட்டவர், முதுமை அடைந்தவர் எல்லோரும் வாக்களிக்க அனுமதிக்கும் போது, தீவிரவாதிகள், குற்றவாளிகள் பதவி ஏற்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியவில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 20:53

இறையாண்மையையே ஏற்காத பிரிவினைவாத ஆட்கள் எதன் மீது உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்? AAP காங்கிரஸ் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை தீவீரவாத வளர்ச்சி.


Pandiarajan Thangaraj
ஜூலை 03, 2024 20:26

தீவிரவாதிகள் எல்லாம் MP. முதலில் சட்டத்தை மாற்றுங்கள்


தத்வமசி
ஜூலை 03, 2024 19:36

சூப்பர். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய அந்த நீதியாளர்கள் எங்கே போனார்கள் ? ஜனநாயகம் கேலிக் கூத்தாகி உள்ளது. இவர்கள் காத்து வாங்குகிறார்களா ?


Es
ஜூலை 03, 2024 19:08

Shame


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை