உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளத்தொடர்பு இளைஞர் கொலையில் 4 பேர் கைது

கள்ளத்தொடர்பு இளைஞர் கொலையில் 4 பேர் கைது

கலபுரகி: கள்ளத்தொடர்பு காரணமாக, இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கலபுரகி, அப்ஜல்புராவின், மன்னுாரு கிராமத்தை சேர்ந்தவர் ரம்ஜான் மெகபூப், 24. இதே கிராமத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் துபாயில் பணியாற்றுகிறார். இந்த பெண்ணுடன் ரம்ஜான் மெஹபூபுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து, உல்லாசமாக இருந்தனர்.இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர், பல முறை கண்டித்தனர். ஊர் பெரியவர்கள் முன்னிலையில், பஞ்சாயத்து பேசி, அறிவுரை கூறினர். ஆனாலும், இவர்களின் கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. எனவே பெண்ணின் குடும்பத்தினர், ரம்ஜான் மெகபூபை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.இவர் நேற்று முன்தினம் மாலை, தனியாக பைக்கில் வயலுக்கு செல்வதை கவனித்தனர். அவர் திரும்பி வருவதற்காக, கிராமத்தின் வெளியே காத்திருந்தனர். அவரும் பைக்கில் வரும் போது வழிமறித்து, கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்தனர்.கொலை தொடர்பாக, விசாரணை நடத்தும் அப்ஜல்புரா போலீசார், மெகபூப் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் மைத்துனர் சந்தோஷ், ராகேஷ், ஆகாஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி