மேலும் செய்திகள்
வெளிநாட்டுக்கு செல்லமாட்டேன்: அனில் அம்பானி உறுதி
7 hour(s) ago | 3
வேலை வாய்ப்பு முகாம் இன்று துவக்கம்
7 hour(s) ago
சைபர் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ. 8 லட்சம் இழப்பு
7 hour(s) ago
துமகூரு: குனிகலில் ராமநவமியை ஒட்டி, பானகம் குடித்த 42 பேர் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துமகூரு மாவட்டம், குனிலின் கொவட்டி கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ராமநவமி கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மோர், பானகம் வழங்கப்பட்டது. அன்று மாலையில் 42 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் உள்ளூர் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தாலுகா சுகாதார அதிகாரி மாரியப்பா, நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்த்து ஆறுதல் கூறினர். கலப்பட பானகம் உட்கொண்டதே சம்பவத்துக்கு காரணம் என டாக்டர் தெரிவித்தார். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது.பானகம் குடித்து வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர். இடம்: துமகூரு.
7 hour(s) ago | 3
7 hour(s) ago
7 hour(s) ago