உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.4.77 கோடி தங்கம் பறிமுதல்

ரூ.4.77 கோடி தங்கம் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரு, தேவனஹள்ளியின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை பாங்காகில் இருந்து இரண்டு பயணியர் வந்திறங்கினர். விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் வைத்திருந்த ஹேண்ட் பேகை சோதனையிட்ட போது தங்கம் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. 6.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 4.77 கோடி ரூபாயாகும்.சமீபத்தில் துபாயில் இருந்து வந்திறங்கிய, இரண்டு பயணியர் சிறப்பான முறையில் உடை அணிந்திருந்தனர். இவர்கள் ஜீன்ஸ் பேன்ட், டி ஷர்ட்டில் தங்கத்தை பவுடர் வடிவில் மறைத்து வைத்து கடத்தினர். இவர்களிடம் 1.96 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை