உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 புதிய லே அவுட்கள் ஜமீர் அகமதுகான் தகவல்

5 புதிய லே அவுட்கள் ஜமீர் அகமதுகான் தகவல்

பெங்களூரு: ''மாநிலத்தில் புதிதாக ஐந்து லே அவுட்டுகள் அமைக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.மேலவை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் கோவிந்த ராஜு கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ஜமீர் அகமதுகான் கூறியதாவது:மாநிலத்தில் ஐந்து இடங்களில், அனைத்து வசதிகளும் கொண்ட ஐந்து புதிய லே அவுட்டுகள் அமைக்க, முடிவு செய்துள்ளோம். எந்த இடத்தில் லே அவுட் அமைக்கப்படும் என்பதை பகிரங்கப்படுத்த மாட்டோம். ஏனென்றால் திட்டத்துக்கு நிலம் கொடுக்க விவசாயிகள் தயங்குவர்.மாநிலத்தில் புதிதாக லே அவுட்டுகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வந்துள்ளது. ஒரு லே அவுட் அமைக்க, குறைந்தபட்சம் 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படும். விவசாயிகளிடம் பலவந்தமாக நிலத்தை கையகப்படுத்த, எங்களால் முடியாது. அவர்களின் மனதை கரைக்க வேண்டும்.ஒரு லே அவுட்டில், பார்க்கிங், ஸ்டேடியம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும். ஏற்கனவே ஆனேக்கல்லில் 1,000 ஏக்கர் நிலத்தில், அடிப்படை வசதிகள் கொண்ட லே அவுட் அமைத்து, வெற்றி அடைந்துள்ளோம்.நிலத்தை விட்டு தரும் உரிமையாளர்களுக்கு, 50 சதவீதம் மனைகளை வழங்க ஒப்பந்தம் செய்து கொள்வதா அல்லது நிலத்தை முழுமையாக, நாங்களே வாங்குவதா என்பதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. வீட்டு வசதி ஆணையம் சார்பில், நிலம் வாங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட் அருகில் முந்தைய அரசு 71 ஏக்கரில் லே அவுட் அமைக்க முன்வந்தது. ஆனால் சிறிய அளவில் நிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை