ஹாவேரி: ''காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் எனக்கு வெற்றி பெற்று தரும்,'' என, ஹாவேரி காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த்சாமி கடேதேவரமத் நம்பிக்கை தெரிவித்தார்.ஹாவேரி காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த்சாமி கடேதேவரமத் அளித்த பேட்டி:காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் பற்றி, ஹாவேரி தொகுதியில் வீடு, வீடாக சென்று, எங்கள் கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர். வாக்குறுதித் திட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது.அவை எனக்கு வெற்றி பெற்று தரும். தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் வெவ்வேறு பிரசார யுக்திகளை பயன்படுத்துகின்றனர். நாட்டில் பிரதமர் மோடி அலை இருப்பதாக கூறி, பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிக்கலாம். சர்க்கரை ஆலை
கர்நாடகாவில் வாக்குறுதித் திட்ட அலை உள்ளது. கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் கிடைப்பதை, பா.ஜ.,வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே வாக்குறுதிகளை விமர்சித்து வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னரும், மக்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஹாவேரி எம்.பி.,யாக இருந்த சிவகுமார் உதாசி, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தற்போதைய வேட்பாளரான முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், ஹாவேரிக்கு எதுவும் செய்யவில்லை. பேடகி மிளகாய்க்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. பேடகி ஏ.பி.எம்.சி., மார்க்கெட் விரிவுபடுத்த வேண்டும். ரயில் பாதைகள்
பேடகியில் சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும். ஷிரஹட்டியில் ஜவுளி பூங்கா அமைப்பது உட்பட, நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளது. நான் வெற்றி பெற்றால், வாடி - கதக், முண்டரகி - ஹரப்பனஹள்ளி இடையில் ரயில் பாதை; ராணிபென்னுார் - ஷிவமொகா ரயில் பாதைக்கு முன்னுரிமை அளிப்பேன். மகதாயி நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற குரல் கொடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.