உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 வருஷம்; 10 ஆயிரம் பேர்; கணக்கு சொல்கிறார் மணிப்பூர் முதல்வர்!

5 வருஷம்; 10 ஆயிரம் பேர்; கணக்கு சொல்கிறார் மணிப்பூர் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: 'மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டுள்ளர்' என சட்டசபையில் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்தார்.கடந்தாண்டு மே மாதம் முதல் நடந்து வரும் வன்முறை குறித்து, சட்டசபையில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேசியதாவது: வன்முறையில் கூகி மற்றும் மெய்டி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த, 226 பேர் கொல்லப்பட்டனர்.

அத்தியாவசிய பொருட்கள்

நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திரும்ப கொடுக்க முயற்சிகளும் நடந்து வருகின்றன. நிவாரண முகாம்களில் உள்ள மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3,483 விவசாயிகளுக்கு ரூ.18.91 கோடி பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.வீடுகள் சேதமடைந்த 2,792 குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. 59, 414 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

11,892 வழக்குகள்

வன்முறை தொடர்பாக, 11,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் மியான்மர் , சீனா, வங்கதேசம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
ஆக 03, 2024 12:28

என்னதான் ரகளை செய்தாலும், கஞ்சா செடிகள் முற்றிலும் அங்கிருந்து அழிக்கப்பட்டு வேறு வழியின்றி போதை பொருள் ஆட்கள் அங்கிருந்து ஓடுமாறு செய்யவேண்டும். வயநாட்டிலும் கிறிஸ்துவ மிஷனரிகள் வியாபாரத்துக்கு வேண்டி மலை மற்றும் காட்டை அழித்தனர். அதேபோல் மணிப்பூரில் கஞ்சா வியாபாரம் இங்கு இயற்க்கை சீற்றத்தால் உயிர்சேதம் அங்கு இவர்கள் விளைவித்த கலவரங்களால். உயிர் சேதங்களை பொருட்படுத்தும் கூட்டமல்ல இவர்கள். இஸ்ரேல் போல் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து உண்மையான இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டியவர்கள்.


Apposthalan samlin
ஆக 03, 2024 11:30

மைதி 41 குக்கி 185 இதை தனி தனியாக சொல்ல வேண்டியது தானே . முதல்வரின் குள்ள நரித்தனம் .அடுத்த தேர்தலில் வர முடியாது .


Nagarajan D
ஆக 03, 2024 14:18

யாரு வீட்டுல நெருப்பு எரியுது அங்க போயி எது திருடலாம் என அலையும் ஒரு கோஷ்ட்டி அது இந்த மதம் மாற்றி திருட்டு கூட்டம்


மேலும் செய்திகள்