உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒன்பதாவது முறையாகவும் மாற்றமில்லை தொடர்கிறது 6.50 சதவீத ரெப்போ வட்டி

ஒன்பதாவது முறையாகவும் மாற்றமில்லை தொடர்கிறது 6.50 சதவீத ரெப்போ வட்டி

மும்பை:பலரும் எதிர்பார்த்ததைப் போலவே, ரிசர்வ் வங்கி, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. இதனால் வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, வீட்டுக் கடன் வாகனக் கடன் போன்றவற்றுக்கான தவணை தொகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.மும்பையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இந்த குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உட்பட நான்கு பேர், ரெப்போ வட்டி விகிதத்தை இதே நிலையில் தொடரவும்; இருவர் மாற்றம் மேற்கொள்ளவும் வாக்களித்தனர். இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாகவே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

• ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாகவே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதுநடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பு 7.20 சதவீதமாகவே தொடர்கிறதுநடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பும் 4.50 சதவீதமாகவே தொடர்கிறதுஉலகளவில் பொருளாதார வளர்ச்சி சூழல் சாதகமாக உள்ள நிலையில், சவால்களும் இருக்கின்றனநடப்பு கணக்கு பற்றாக்குறை கையாளக் கூடிய அளவிலேயே உள்ளதுஅன்னிய செலாவணி கையிருப்பு 56.03 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதுநடப்பு நிதியாண்டில் ரூபாயின் இதுவரையிலான செயல்பாடு, எதிர்பார்த்த வரம்புக்குஉள்ளேயே உள்ளதுஅடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், வரும் அக்டோபர் மாதம் 7 முதல் 9ம் தேதி வரை நடைபெறும்.

ரிசர்வ் வங்கியின் 7 கவலைகள்

மக்கள், வங்கி டிபாசிட்களிலிருந்து மற்ற பிற முதலீடுகளுக்கு மாறத் துவங்கியுள்ளது டிபாசிட்கள் சேகரிக்க வங்கிகள் சிரமப்படுவதுவங்கி கணக்குகளில் உள்ள சேமிப்புகள், முன்பேர வணிகத்தில் பயன்படுத்தப்படுவதுஇத்தகைய காரணங்களால் வங்கிகளின் ரொக்க கையிருப்பு பாதிக்கப்படலாம் எனும் நிலைஏற்கனவே வாங்கிய வீட்டுக் கடனைத் தாண்டி மீண்டும் வாங்கப்படும் கடன், வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதுசில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாததுவங்கிகள் குறுகிய கால நிதி திரட்டலில் ஈடுபடுவது

கடன் செயலிகளுக்கு கடிவாளம்

ஒழுங்குபடுத்தப்படாத பல நிறுவனங்கள், செல்போன் செயலிகள் வாயிலாக கடன் வழங்கி வருவதால், அவற்றை கட்டுப்படுத்தும் வகையில், ரிச்ர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடைய கடன் செயலிகளின் பொது களஞ்சியம் உருவாக்கப்பட உள்ளது. தங்களது கடன் செயலிகள் குறித்த தகவல்களை இந்த களஞ்சியத்தில் பதிவேற்ற வேண்டும். நுகர்வோர், ஒழுங்குபடுத்தப்படாத நிதி நிறுவனங்களை எளிமையாக கண்டறிய இது உதவும்.

வளர்ச்சியை தக்கவைக்க முடியாது

விலை ஸ்திரத்தன்மை இன்றி, தற்போது அடைந்து வரும் அதிக வளர்ச்சியை தக்க வைக்க முடியாது. உணவுப் பொருள் பணவீக்கம் தற்காலிகமானதாக இருந்தால் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து அதிகரித்தே காணப்படுவதால், அவ்வாறு இருக்க முடியாது. இதன் காரணமாக மற்ற பிரிவுகளில் பணவீக்கம் அதிகரிக்காமல் இருக்கவும்; இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தக்க வைத்துக் கொள்ளவும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும். தற்போதைய பணக் கொள்கையின் படி, பணவீக்கமும், வளர்ச்சியும் நிலையாக மேம்பட்டு வருகின்றன. உள்நாட்டு பொருளாதார சூழலும் நிலையாக உள்ளது.

சக்திகாந்த தாஸ்,கவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி