உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய இருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய இருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

பெங்களூரு: வெளி மாநில இளம் பெண்களை, பலவந்தமாக விபச்சாரத்தில் தள்ளிய இருவருக்கு, தலா எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெங்களூரின் ஆர்.டி.நகரில் வசிப்பவர்கள் ஷேக் ரியாஜுதீன், 35, மற்றும் தேவதாஸ், 35. இவர்கள் ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களுக்கு, வேலை ஆசை காண்பித்து பெங்களூரு அழைத்து வந்தனர். லைவ் பேண்டில் வேலை கிடைக்கும் என, நம்ப வைத்தனர்.ஆனால் ஆர்.டி.நகரில் வீட்டில் அடைத்து வைத்தனர். பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். சில மாதங்களுக்கு முன், போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி, இளம்பெண்களை மீட்டனர். இவர்களை விபச்சாரத்தில் தள்ளிய ஷேக் ரியாஜுதீன், தேவதாசை கைது செய்தனர்.பெங்களூரின், 71வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் தலா எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி பாலசந்திர பட் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

subramanian
ஜூலை 28, 2024 19:08

இதைப்போன்ற குற்றவாளிகளை மனித கழிவை அள்ள அரசாங்கம் பயன்படுத்தவேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூலை 28, 2024 19:02

அநீதிமன்ற நீதிபதிகளே ஒரு சிறிய விளக்கம் சொல்ல முடியுமா உங்களால்????1 சிறையில் அவர்களை தள்ளுவதால் அவர்கள் திருந்துவார்களா??? 2 சிறையில் அவர்களுக்கு எல்லா வசதிகள் செய்து கொடுக்க அரசு பணம் யாரிடமிருந்து வருகின்றது, வரி கட்டுபவர்களிடமிருந்து தானே. அப்போ இந்த செலவு அனாவசியம் தானே. இதற்கு ஒரே தீர்வு தவறு கண்டேன் சுட்டேன். தவறு நிகழ்வது உடனே குறைந்து விடும். 143 கோடி மக்கள் ஜனத்தொகை கொண்ட நாடு நமது இதில் குற்றவாளிகள் என்று 1 கோடி செத்தாலும் நாடு ஒன்றும் ஜனத்தொகை இல்லாமல் இருக்காது


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 18:05

சமூக விரோத செயல்களில் அவிங்க பங்கு கட்டாயம் இருக்கும் ..... அதுக்காக நாட்டை முன்னேத்துறதுலயும் இருக்குமா ன்னு கேட்றாதீங்க .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை