உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தினமும் 90 பலாத்கார வழக்குகள்: மோடிக்கு கடிதம் எழுதி மம்தா வேதனை

தினமும் 90 பலாத்கார வழக்குகள்: மோடிக்கு கடிதம் எழுதி மம்தா வேதனை

புதுடில்லி: தரவுகள் அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பலாத்கார வழக்குகள் பதியப்படுவது வேதனை அளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும் என பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி வலிறுத்தியுள்ளார்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு, நாடு முழுதும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை முதல்வரின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாயா செய்தியாளர்களுக்கு வாசித்தார்.அதில் நாடு முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதை இந்நேரத்தில் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த வழக்குகளில் சிலவற்றில் கொலை சம்பவங்களும் நடகிறது. இதன் மூலம் தரவுகள் அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.இது போன்ற தரவுகள் நம் சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் கடமை. இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான மத்திய சட்டத்தின் கீழ் விரைவாக விசாரணை நடத்தி, விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, வழக்கினை 15 நாட்களுக்கு முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Kumar
ஆக 23, 2024 11:05

நடிப்ப விட்டுட்டு மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் மாநிலத்துக்கு நல்லது.


stb
ஆக 23, 2024 09:10

Action over madam


Kasimani Baskaran
ஆக 23, 2024 05:56

கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் மாநிலத்துக்கு நல்லது.


P. Siresh
ஆக 23, 2024 04:57

15 நாட்களில் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கேட்கிறார். அப்படி சட்டம் வந்தால் இவர் தினமும் இரண்டு கற்பழிப்பை அரங்கேற்றுவார். தண்டனை வாங்கி கொடுத்து விட்டேன் என்பார். தமிழ் நாட்டு மக்களும், கல்கத்தா மக்களும் திருந்தினால் ஒழிய இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. ஒரு மாநிலங்களிலும் காசுக்கு ஓட்டு என்றாகி விட்டது. இது ஒழிய வேண்டும். அப்போதுதான் இந்த குற்றங்கள் தடுக்கப்படும்


P. Siresh
ஆக 23, 2024 04:48

மம்தாவிற்கு இந்தியா பற்றிய கவலை திடீர் என்று ஏன் வந்தது?இவர் பயத்தில் உளறுகிறார் இந்தியாவில் என்ன செய்ய வேண்டும் என்பதை மோடி பார்த்து கொள்வார்.இவருக்கு ஏன் கவலை.


Priyan Vadanad
ஆக 23, 2024 04:20

அடெய்ங்கப்பா அம்மா எம்புட்டு தூரம் வந்து பிரதமரை கண்டு பேசி கடிதம் வேறு கொடுத்திட்டாங்கென்பது படத்திலிருந்து நல்லா புரியுது/


Barakat Ali
ஆக 23, 2024 12:43

இருவரும் ஒரே புகைப்படத்தில் தேவை ன்பதால் பழைய புகைப்படத்தைப் போட்டுள்ளனர் ... அறிவாலய அறிவாளிகளின் அறிவே அறிவு ........


Kogulan
ஆக 23, 2024 04:06

இந்த அம்மா பசுதோல் போர்த்திய புலி, இந்திய மக்கள் மூளையில்லாதவர்களா? பிரச்சினை இந்தம்மாவுக்கானதாம் ஆனால் பிரச்சினையை திசைதிருப்புவது தெளிவாக தெரிகிறது


R.Varadarajan
ஆக 23, 2024 01:50

இந்த கல்கத்தா காளியின் ஆட்சியில் என்றாவது மே. வங்க மக்கள் நிம்மதியாகவும் சுபிக்ஷமாகவும் வாழ்ந்ததாக வரலாறு உண்டா ? வினையையே தொடர்ந்து விதைத்துக்கொண்டு ஆட்சி நடத்துபவர் வினையைத்தானே அறுவடை செய்யமுடியும்,? மே. வங்கம் மற்றும் தமிழக மக்கள் தாங்களாகவே கொள்ளிக்கட்டையால் தலையில் சொரிந்து கொண்டவர்கள். அதன் பலாபலன்களை இனியாவது உணரவேண்டும். தர்ம நியாயம் பேசி வாய்ப்புகளை தவறவிட்டு அராஜக ஆட்சிகளை வளர்த்து விடும் மோடி அரசுக்கு பதில் 1975 சர்வாதிகாரி இன்று ஆட்சியில் இருந்தால் மே. வங்கம் மற்றும் தமிழக அரசுகளை ஆட்சியில் நீடிக்கவிட்டிருப்பாரா? இனியாவது இந்த இரு மாநில மக்கள் அறிவுடன் வாக்களிப்பார்களா? மாறாக கொள்ளிக் கட்டையால் தலையில் சொரிந்து கொள்ளப்போகிரார்களா?


இராம தாசன்
ஆக 23, 2024 01:20

INDI கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாயை திறக்காமல் இருக்கிறார்கள் - என்ன ஒரு ஒற்றுமை. பப்பு கூறுகிறார் இது திசை திருப்பும் செயல் என்று - வெட்கமாக இல்லை? தமிழகத்தில் நடந்ததை பற்றியும் எந்த ஒரு செய்தி நிறுவனமும் செய்தி வெளியிடவில்லை


இராம தாசன்
ஆக 23, 2024 01:16

எத்தனை மாநில முதல்வர்கள் அவர்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்துகிறார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை