உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 97.87% ரூ. 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின

97.87% ரூ. 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின

புதுடில்லி :திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில், 97.87 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது-.கடந்த ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அறிவித்த போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது இதன் மதிப்பு, 7,581 கோடி ரூபாயாக குறைந்துஉள்ளது.திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி, நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதன் மதிப்பிலான தொகையை, தங்களது வங்கி கணக்கில் வரவு செய்து கொள்ளலாம்; அல்லது, அதற்குரிய மதிப்பிலான பிற நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூலை 02, 2024 05:06

2% கள்ளப்பணம்?


Mani . V
ஜூலை 02, 2024 04:34

அதுதான் ஊழல்வாதிகள் கொள்ளையடித்து வைத்திருந்தது வங்கிக்கு திரும்ப போதிய அவகாசம் கொடுத்துள்ளீர்களே. அப்புறம் திரும்பாமல் என்ன செய்யும்?


மேலும் செய்திகள்