மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
ஜாப்ராபாத்:வடகிழக்கு டில்லியின் ஜாப்ராபாத் பகுதியில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜாப்ராபாத் வெல்கம் காலனி கபீர் நகரில் வசிக்கும் 16 வயது சிறுவன் தன் நண்பர்களுடன் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு மார்காரி சவுக் பஜாருக்கு சென்றான். அங்கு ஒரு கடையில் ஆடைகள் வாங்கிக் கொண்டு 9:35 மணிக்கு வெளியே வந்த போது, இரண்டு ஸ்கூட்டர்களில் வந்த சிலர், சிறுவன் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவன் சரிந்து விழுந்ததும் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலீசார் முதுகில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து துடித்துக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு, ஜி.டி.பி. அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1