உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை பள்ளங்களை மூடும் ஜெட் பேச்சர் இயந்திரம்

சாலை பள்ளங்களை மூடும் ஜெட் பேச்சர் இயந்திரம்

பெங்களூரு: பெங்களூரில் ரோடு பள்ளங்களை, விரைந்து மூடும் நோக்கில், 'ஜெட் பேச்சர் இயந்திரம்' பயன்படுத்தப்படுகிறது.இது தொடர்பாக, ராஜராஜேஸ்வரி நகர் மண்டல இணை கமிஷனர் அஜய் கூறியதாவது:பெங்களூரில் ரோடு பள்ளங்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இவற்றை மூடுவது பெரும் தலைவலியாக உள்ளது. ரோடு பள்ளங்களை எளிதில் மூட, 'ஜெட் பேச்சர்' என்ற இயந்திரம், வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில், சோதனை முறையில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.பந்தரபாளையா, நாயண்டஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகில், ரோடு பள்ளங்கள் மூடும் பணிகள் நடக்கின்றன. பத்து பேர் செய்ய கூடிய பணிகளை, ஜெட் பேச்சர் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் முடிக்கும். இதன் செயல் திறன் சோதிக்கப்படுகிறது.ரோட்டின் பள்ளத்தில், சிமென்ட் கலவை பைப் வழியாக கொட்டும். அதை காம்பாக்டர் சமநிலைப்படுத்தும். அதன்பின் சிறிது நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இரவு, பகல் பாராமல் பள்ளங்கள் மூடப்படுகின்றன.ராஜராஜேஸ்வரி மண்டலத்தில், 20 வார்டுகள் உள்ளன. 216.45 கி.மீ., மெயின் ரோடுகள் உட்பட, 2,045 கி.மீ., துார ரோடுகள் உள்ளன. மே 20 வரை 2,443 பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டன. 2,408 பள்ளங்கள் மூடப்பட்டன. 35 பள்ளங்கள் மூடும் பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

செயல்பாடு எப்படி?

பள்ளமாக இருக்கும் சாலையை மூடுவதற்கு, தள்ளு வண்டியில் ஜல்லிகற்கள் கொண்டு சென்று, அதை கொட்டி அதன் மேல் தாரை ஊற்றி, ரோடு ரோலர் மூலம் சாலையை சமன்படுத்துவது வழக்கம்ஆனால் ஜெட் பேச்சர் இயந்திர செயல்பாடு, அது போன்று இல்லை.இயந்திரத்தில் இருந்து பைப் வழியாக, பள்ளமாக இருக்கும் இடத்தில், ஜல்லி கற்களை கொட்டலாம். அதன்மீது தாரையும், இயந்திரம் மூலமே ஊற்றலாம். இதன்மூலம் சாலை பள்ளம் மூடப்படுகிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, சாலை பள்ளங்களை விரைவாக மூடலாம் என்று இன்ஜினியர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை