உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய தேடுதல் வேட்டையில், ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றினர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஓராண்டாக கூகி மற்றும் மெய்டி இன மக்களிடையே மோதல் போக்கு நிலவுகிறது. அவ்வப்போது ஏற்படும் கலவரத்தால் பொதுமக்கள் மற்றும் போலீசார் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், மணிப்பூரின் கிழக்கு இம்பால் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் நேற்று பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், கையெறி குண்டுகள், சக்திவாய்ந்த ஐ.இ.டி., வகை குண்டுகள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வாக்கிடாக்கிகள் மற்றும் ரேடியோ செட்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.இவற்றில் பல பெரிய வெடிகுண்டுகள் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் சனாசபி நாதம் சிங் பகுதியில் இருந்தும், மற்றவை பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கெய்னோவு மேனிங் பகுதியில் இருந்தும் கைப்பற்றப்பட்டு உள்ளன.இதற்கிடையே, ஜிரிபம் மாவட்டத்தில் நேற்று சட்டவிரோத கும்பல் வீடுகளுக்கு தீ வைக்க முயன்றது. இதையடுத்து அங்கு அசாம் ரைபிள்ஸ், துணை ராணுவப் படை மற்றும் மணிப்பூர் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RajK
ஜூன் 28, 2024 10:09

பயங்கர ஆயுதங்களாக தெரிகிறது. வெளிநாடு ஆதரவுடன் வந்திருக்க வேண்டும். பிரிவினைவாதம் மணிப்பூர், பஞ்சாப்பில் அதிகமாக தலை தூக்குகிறது. தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் அவ்வப்போது தலை தூக்கும்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை