உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆறு வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

ஆறு வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

கோவிந்த்புரி:தென்கிழக்கு டில்லியில் ஆறு வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.கோவிந்த்புரி பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் 1ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென மாயமானதாக போலீசில் அவனது பெற்றோர் புகார் அளித்தனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு சிறுவன் திரும்பி வந்துவிட்டதாகக்கூறி காவல் நிலையத்துக்கு அவனை பெற்றோர் அழைத்து வந்தனர்.சிறுவன் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டான். செவ்வாய்க்கிழமை தன் பெற்றோரிடம் சிறுவன், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றிக்கூறியுள்ளான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கலு என்ற பல்ராம் தாஸ், 35, என்பவரை கைது செய்தனர். தகவல் அறிந்து கூடிய பொதுமக்கள், குற்றவாளியை தாக்க முற்பட்டனர்.சிறுவனுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின், சிறுவனிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.காவல் நிலையத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படுமென, அவர்களிடம் போலீசார் உறுதி அளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை