உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை 

விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை 

கலபுரகி: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானதால், விசாரணைக்கு பயந்து வாலிபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கலபுரகி கமலாபுரா லடமுகாலி கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி, கோவில் திருவிழா நடந்தது. சாமி சிலை முன்பு நடனம் ஆடும் தகராறில், இரு சமூக வாலிபர்கள் இடையில், மோதல் ஏற்பட்டது.இதையடுத்து ஊர் பெரியவர்கள் முன், பஞ்சாயத்தும் நடந்தது. போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்று, இருதரப்பு வாலிபர்களையும், ஊர் பெரியவர்கள் கேட்டு கொண்டனர்.ஆனாலும் ஒரு சமூக வாலிபர்கள், இன்னொரு சமூக வாலிபர்கள் மீது, நரோனா போலீசில் புகார் அளித்தனர். லடமுகாலி கிராமத்தின் நிகில் பூஜாரி, 23, அவரது நண்பர்கள் சிலர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது.இதையடுத்து விசாரணைக்கு பயந்த நிகில் பூஜாரி, கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் வெளியில் சுற்றினார். இந்நிலையில் நேற்று மதியம், விவசாய நிலத்தில் உள்ள மரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
மே 08, 2024 18:49

பத்து கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று செய்தி வருகிறது அவருக்கு நெஞ்சழுத்தம் என்று சொல்லுவத


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை