உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமனுக்காக யாகம் நடத்திய கோவில்

ராமனுக்காக யாகம் நடத்திய கோவில்

சிக்கமகளூரு இயற்கை அழகுக்கு மட்டும், பிரசித்தி பெற்றது இல்லை. வரலாறு, புராணம், ராமாயணம், மஹாபாரதத்துக்கும் சாட்சியாக உள்ளது. அஷ்ட முனிவர்கள், ராமனுக்காக யாகம் நடத்திய இடம் இங்குள்ளது.ஸ்ரீராமன் என்பது பெயர் அல்ல. கோடானு கோடி இந்தியர்களின் சக்தியாகும். ராமனின் வருகைக்காக முனிவர்கள் யாகங்கள் நடத்தினர். சிக்கமகளூரு, மூடிகெரேவின், குளுவாசேவின், கூடிகே கிராமத்தில் ஹேமாவதி ஜபவதி ஆற்றங்கரையில், ராமனின் தரிசனத்துக்காக அஷ்ட முனிவர்கள், யாகங்களை நடத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன. இங்கு ஸ்ரீராமன், சீதா, லட்சுமண், ஆஞ்சனேயர் குடிகொண்டுள்ள கோவில் உள்ளது.ஹேமாவதி ஜபவதி ஆற்றங்கரையில், அஷ்ட முனிவர்கள் வசித்ததாக நம்பப்படுகிறது. ராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்த போது, அவரது ஆட்சி சுபிட்சமாக இருக்க வேண்டும் என, முனிவர்கள் யாகம் நடத்தினர். அன்று முதல், இன்று வரை இங்கு ராமனுக்கு பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை, சிறப்பு திருவிழாவும் நடக்கிறது.கோவிலில் ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் விக்ரகங்கள் உள்ளன. புராதனம், வரலாற்றுக்கு சாட்சியாக கோவில் அமைந்துள்ளது- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்