உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடுப்பியில் கும்பல் மோதல் வீடியோ வெளியாகி பரபரப்பு 

உடுப்பியில் கும்பல் மோதல் வீடியோ வெளியாகி பரபரப்பு 

உடுப்பி, உடுப்பியில் இரு கும்பல் கார்கள் மோதியும், ஆயுதங்களால் தாக்கியும் மோதலில் ஈடுபட்ட, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உடுப்பி டவுன் குஞ்சிபேட் பகுதியில், கடந்த 20ம் தேதி இரவு, இரு கார்களில் வந்த ஆறு பேர் கும்பல் இடையில், திடீரென மோதல் ஏற்பட்டது. இரு கும்பலும் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். கார்களால் மோதிக் கொண்டனர். இந்த காட்சிகளை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வேகமாக பரவிய பின்னர், இரு கும்பல் மோதலில் ஈடுபட்டது தெரிந்தது.இது தொடர்பாக உடுப்பி டவுன் போலீசார், காபுவை சேர்ந்த ஆஷிக், ரகீப் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடுகின்றனர். கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், இரண்டு பைக்குகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை