உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரஹலட்சுமி திட்டத்தால் பிரிட்ஜ் வாங்கிய பெண்

கிரஹலட்சுமி திட்டத்தால் பிரிட்ஜ் வாங்கிய பெண்

ஹாவேரி : காங்கிரஸ் அரசின் கிரஹலட்சுமி திட்டத்தில் கிடைத்த பணத்தில், கன்னட புத்தாண்டு பிறப்பான நேற்று புதிய பிரிட்ஜ் வாங்கிய பெண், அதற்கு திலகமிடும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.கடந்தாண்டு கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.அதில், மாதந்தோறும் பெண்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.ஹாவேரி மாவட்டம், ஷங்காவி நகரை சேர்ந்தவர் லதா. கிரஹலட்சுமி திட்டத்துக்காக, தன் பெயரை பதிவு செய்து, மாதந்தோறும் 2,000 ரூபாய் வாங்கி வந்தார்.இதில் 17,500 ரூபாய் சேமித்த அவர், நேற்று கடைக்குச் சென்று, பிரிட்ஜ் வாங்கினார். வீட்டுக்கு வந்ததும், பிரிட்ஜுக்கு திலகம் இட்டு, தீபாராதனை காண்பித்தார்.கிரஹலட்சுமி திட்டத்தால் எந்த பலனும் இல்லை என கூறி வந்தவர்கள் மத்தியில், இத்திட்டத்தால் வாங்கிய பிரிட்ஜுக்கு பூஜை செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arul Narayanan
ஏப் 10, 2024 18:36

இதுவே எங்க ஊராய் இருந்தால் புருஷன் காரன் பறித்துக் கொண்டு போய் டாஸ்மாக்கில் விட்டு பாதி அரசாங்கத்திற்கும் பாதி திருடர்களுக்கும் போயிருக்கும்


Sivak
ஏப் 10, 2024 13:47

ஓ சி ல கெடச்ச பணத்துல இந்த பெண் பிரிட்ஜ் வாங்கி இருக்கு சோத்துக்கு வழி இல்லாம தெருக்களில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள் ஆண்கள் பெண்களும் தான் மக்கள் உழைச்சு அரசாங்கத்திற்கு குடுக்கும் வரிப்பணத்தை இப்படி ஓ சி ல ஒரு உழைப்பும் இல்லாம பணம் கொடுக்கறது ஒரு நல்ல அரசா?


Ramesh Sargam
ஏப் 10, 2024 10:47

இந்த ஒரு பெண்மணிதான் அந்த திட்டத்தால் பயன் அடைந்தாரா அல்ல பல பெண்கள் பயன் அடைந்தார்களா? ஒருவேளை விளம்பரத்திற்காக, விளம்பரம் செய்து மக்களை ஏமாற்ற காங்கிரஸ் இந்த வீடியோவை ரெக்கார்டு செய்து வெளியிட்டிருக்கிறதா? அப்படித்தான் இருக்கும் என்று எனக்கு கொஞ்சம் டவுட்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ