உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீ குண்டத்தில் இறங்கி  நமாஸ் செய்த வாலிபர் 

தீ குண்டத்தில் இறங்கி  நமாஸ் செய்த வாலிபர் 

பாகல்கோட்: ஹிந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய மொஹரம் பண்டிகையின் போது, தீ குண்டத்தில் இறங்கி வாலிபர் நமாஸ் செய்தார்.பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகா சீரலகொப்பா கிராமத்தில் ஹிந்து, முஸ்லிம்கள் சகோதரர்கள் போல பழகி வருகின்றனர். முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகையை ஹிந்துக்களும், ஹிந்துக்கள் பண்டிகையில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை ஹிந்து, முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடுகின்றனர்.நேற்று முன்தினம் மொஹரம் பண்டிகையை ஒட்டி, இரவு கிராமத்தில் உள்ள மசூதி முன்பு, தீ குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.ஹுசைன் மவுலானா என்ற வாலிபர் தீ குண்டத்தில் இறங்கி, ஒரு துணியை விரித்து நமாஸ் செய்தார். பின்னர் தீ குண்டத்தில் இருந்து வெளியே வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ