உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ஜினியர் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் அசத்தும் வாலிபர்

இன்ஜினியர் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் அசத்தும் வாலிபர்

இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக வருமானம் ஈட்டும் தொழிலாக விவசாயம் மாறி வருகிறது. பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கூட, வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.பட்டதாரிகள், இன்ஜினியர்கள், பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருந்த வாலிபர், விவசாயத்தில் அசத்துவதை பற்றி இங்கு பார்க்கலாம்.உத்தர கன்னடாவின் ஷிர்சி பனவாசியை சேர்ந்தவர் சுபாஷ் வீரப்ப காடேனஹள்ளி, 34. மும்பையில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்தார். 2018 முதல் விவசாயத்தில் ஈடுபடுகிறார். 17 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கரில் காய்கறிகள், ஆறு ஏக்கரில் வால்நட், அன்னாசி பழங்கள் பயிரிட்டு வளர்க்க ஆரம்பித்தார்.காய்கறிகள், வால்நட், பழங்கள் விற்பனை மூலம், தற்போது ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். விவசாயத்தில் சாதித்தது பற்றி சுபாஷ் கூறுகையில்:எனது அப்பாவும், அண்ணனும் விவசாயம் செய்து வந்தனர். அவர்களுடன் சேர்ந்து நானும், விவசாய பணியில் ஈடுபட்டு உள்ளேன். 2018ல் விபத்தில் அப்பாவும், அண்ணனும் இறந்தனர். அதன்பின்னர் குடும்பத்தை கவனிக்க, இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டேன்.சொந்த ஊருக்கு வந்து, விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். முதலில் நெல் பயிரிட்டேன். எனது விவசாய நிலம், வரதா ஆற்றை ஒட்டி இருப்பதால், கனமழை பெய்து, ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், நிலத்தில் தண்ணீர் தேங்கியது. நெற்பயிர்களும் அழுகின.எனது உறவினர்கள் சிலர், 'நெற்பயிருக்கு பதிலாக, வால்நட், அன்னாச்சி பழங்களை பயிரிடுங்கள், வெள்ளத்தை தாங்கும் திறன் கொண்டது' என்றனர். இதையடுத்து வால்நட், அன்னாச்சி பழங்களை பயிரிட ஆரம்பித்தேன். எங்கள் வீட்டின் உபயோகத்திற்காக, எனது நிலத்தில் ஒரு இடத்தில் நெற்பயிரும் பயிரிடுகிறேன்.எனது நிலத்தில் இறங்கி, நானே தினமும் வேலை செய்கிறேன். தேவைப்படும் நேரத்தில் மட்டும், ஆட்களை வேலைக்கு அழைத்துக் கொள்வேன். காய்கறிகள், அன்னாசி பழத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கமாக இருந்தாலும், வால்நட்டுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம்.சொட்டுநீர் பாசன அடிப்படையில், விவசாயம் செய்வதால், எனது நிலத்திற்கு தண்ணீர் பிரச்னை இல்லை. விவசாய நிலத்தில் 50 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும், குட்டை அமைத்து உள்ளேன். அதில் இருந்து தண்ணீர் எடுத்து, பயிர்களுக்கு பாய்ச்சுகிறேன்.தண்ணீரை சிக்கனப்படுத்தினால், விவசாயத்தில் சாதிக்கலாம் என்பது எனது கருத்து. நமது வாழ்க்கைக்கு, கல்வி மிகவும் முக்கியமானது. அதற்கான பரம்பரை தொழிலான, விவசாயத்தை கைவிட கூடாது. மண்ணை நம்பி கை வைத்தால், வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ