உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி, பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம்

ஆம் ஆத்மி, பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம்

பகர்கஞ்ச்:மாநகராட்சியின் 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துவது, வீட்டுவரியில் சலுகை அளிப்பது ஆகிய இரு தீர்மானங்கள், மாநகராட்சி கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.டில்லி மாநகராட்சியின் கூட்டம் நேற்று பிற்பகல் துவங்கியது. இந்த கூட்டத்தில் ஆணையர் அஸ்வனி குமார் பங்கேற்கவில்லை.மேயர் மகேஷ்குமார் கிச்சி தலைமையில் நடந்த கூட்டத்தில் மேயருக்கும் ஆத் ஆத்மிக்கும் எதிராக பா.ஜ., கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பி தர்ணா செய்தனர்.இதை கண்டித்து, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.பதாகைகளைக் காட்டி பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு கட்சி கவுன்சிலர்களும் கோஷங்களை எழுப்பத் துவங்கினர். போராட்டம் நடத்தியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூச்சலுக்கு மத்தியில் 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தையும் கட்டடங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் தீர்மானத்தையும் சபையில் மேயர் தாக்கல் செய்தார்.கூச்சல், குழப்பங்களுக்கு இடையே இரு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் மகேஷ்குமார், துணை மேயர் ரவீந்திர பரத்வாஜ், அவைத்தலைவர் முகேஷ் கோயல் ஆகியோர் கூறுகையில், 'வரலாற்று சிறப்பு மிக்க இரு முக்கிய தீர்மானங்களும் சபையில் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் பா.ஜ.,வினருக்கு துளியும் இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி