உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.3 லட்சம் மதிப்பு தாலி ரத உற்சவத்தில் அபேஸ்

ரூ.3 லட்சம் மதிப்பு தாலி ரத உற்சவத்தில் அபேஸ்

ஷிவமொகா; ரத உற்சவத்தின்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு பெண்ணின் தங்கச்செயினை மர்மநபர்கள் திருடினர்.ஷிவமொகா, தீர்த்த ஹள்ளியின், அருணகிரி கிராமத்தில் உள்ள லட்சுமி வெங்கடரமணா கோவில் உள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது. இரண்டாவது திருப்பதி என, அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடக்கும்.கடைசி நாளன்று ரத உற்சவம் நடப்பது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அன்னதானம் வழங்கப்படும்.கோவிலில் சில நாட்களாக திருவிழா நடக்கிறது. நேற்று மதியம் ரத உற்சவம் நடந்தது. பெருமளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். ரதத்தை இழுத்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்கத்தாலியை மர்மநபர்கள் பறித்தனர்.தீர்த்தஹள்ளி போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ