ஹூப்பள்ளி : ''நேஹா, அஞ்சலியை கொலை செய்த குற்றவாளிகளை, என்கவுன்டர் செய்ய வேண்டும்,'' என ஷிரஹட்டி பகிரேஸ்வரா மடத்தின் திங்களேஸ்வரா சுவாமிகள் வலியுறுத்தினார்.ஹூப்பள்ளியில் ஏப்ரல் 18ல், பொறியியல் கல்லுாரி வளாகத்தில், மாணவி நேஹா என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த பயாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.* தனிப்படைஹூப்பள்ளியின் வீராபுரா ஓனியில் வசித்த அஞ்சலி, 20, என்பவரை ஆட்டோ ஓட்டுனர் விஸ்வா, 21, ஒரு தலையாக காதலித்தார். இதை அவர் ஏற்கவில்லை. இதனால் கோபம் அடைந்த விஸ்வா, நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டுக்குள் நுழைந்து, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார். இவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.ஒரு மாதத்துக்குள், ஒரே பகுதியில் இரண்டு இளம்பெண்கள் கொலை சம்பவம் ஹூப்பள்ளியை உலுக்கியது.இந்நிலையில், ஷிரஹட்டி பகிரேஸ்வரா மடத்தின், திங்களேஸ்வரா சுவாமிகள், நேற்று ஹூப்பள்ளியில் அஞ்சலி வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.பின், அவர் கூறியதாவது:ஹூப்பள்ளியில் நேஹா, அஞ்சலியை கொலை செய்தவர்களை, என்கவுன்டர் செய்ய வேண்டும். அஞ்சலிக்கு கொலை மிரட்டல் இருந்ததை பற்றி, அவரது பாட்டி போலீசாரிடம் கூறியுள்ளார். நடந்த கொலைக்கு போலீசாரே பொறுப்பு.* இன்று போராட்டம்அஞ்சலி கொலையை கண்டித்து, இன்று நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த தடுக்காத போலீசாரை, பணி நீக்கம் செய்ய வேண்டும். புகார் அளிக்க போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது, மூட நம்பிக்கை என, கூறி அனுப்பினர். இப்போது கொலை நடந்துவிட்டது. அவசியம் ஏற்பட்டால், முதல்வரை சந்திப்பேன். அஞ்சலியின் இரண்டு தங்கைகளை, நாங்கள் தத்தெடுத்து கல்வி அளிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.***...பாக்ஸ்...விஷம் குடித்து தற்கொலை செய்வோம் கொலையான அஞ்சலி தங்கை ஆவேசம்அஞ்சலியின் தங்கை சஞ்சனா கூறியதாவது:பணம் கொடுத்தவர்களை மட்டுமே போலீசார் பாதுகாப்பர். 10,000 ரூபாய், 20,000 ரூபாய் கொடுத்தால் போதும், குற்றவாளிகளை விட்டு விடுவர். கொலையாளியை கைது செய்து, ஹூப்பள்ளியின் சென்னம்மா சதுக்கத்தில் அடித்து கொல்ல வேண்டும்.போலீசாரால் முடியாவிட்டால், குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்கட்டும். நாங்களே நடவடிக்கை எடுக்கிறோம். அதன்பின் எங்களை கைது செய்து, சிறைக்கு அனுப்பட்டும். எங்கள் வாழ்க்கை பாழானாலும் கவலை இல்லை.எங்கள் அக்காவுக்கு ஆபத்து உள்ளது என, புகார் செய்த போது, போலீசார் பொருட்படுத்தவில்லை. இப்போது கொலை நடந்துள்ளது. இப்போது யார், யாரோ வருகின்றனர். ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் என, பணம் கொடுக்கின்றனர். எங்கள் அக்காவை இழந்துவிட்டோம். பணத்தை வைத்து நாங்கள் என்ன செய்வது.நாங்கள் உழைத்து சாப்பிடுவோம். உங்கள் பணம் தேவையில்லை. எங்கள் அக்காவின் சாவுக்கு நியாயம் கிடைத்தால் போதும். நியாயம் கிடைக்காவிட்டால், எங்கள் வீட்டில் உள்ள நால்வரும் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொள்வோம். அப்போதாவது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனரா பார்க்கலாம்.இப்போது வீட்டில் கொலை நடந்துள்ளது. நாளை, நடு ரோட்டில் கொலை நடக்கலாம். அதுவரை போலீசார் காத்திருப்பரா. பெண்கள் சுதந்திரமாக உழைத்து வாழக்கூடாதா. கணவன் சரியில்லை என்றால், எப்படி வாழ்வது. ஏற்கனவே நேஹா, அஞ்சலி என்ற இரண்டு பெண்களை இழந்துள்ளோம். கொலையாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.