மேலும் செய்திகள்
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
2 hour(s) ago | 2
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
6 hour(s) ago | 40
பெங்களூரு, ''பெங்களூரு மக்களுக்கு தரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஒரு வேளை குடிநீரால் ஏதாவது உடல் நலன் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.மைசூரு கே.சாலுண்டி கிராமத்தில், கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்த, ஒருவர் உயிரிழந்தார். பலர் உடல் நிலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அந்த பகுதியில், காலரா பரவி வருவது உறுதியானது.சுகாதார துறை அதிகாரிகள், அந்த கிராமம் முழுதும் போர்க்கால அடிப்படையில், குப்பை, கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.முதல்வர் சித்தராமையா உட்பட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.இந்நிலையில், துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:பெங்களூரு மக்களுக்கு தரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஒரு வேளை குடிநீரால் ஏதாவது உடல் நலன் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய தலைவர், தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.மாநிலத்தின் சில பகுதிகளில், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து, பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் எச்சரித்துள்ளார்.எனவே பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சுத்தமான குடிநீர் மையங்களுக்கு, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். சரியாக செயல்படுகிறதா, தண்ணீர் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.அனைத்து மையங்களின் தண்ணீர், பரிசோதனை செய்து, குடிப்பதற்கு உகந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 2
6 hour(s) ago | 40