உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 784 இடங்களில் அதிரடி ரெய்டு

784 இடங்களில் அதிரடி ரெய்டு

புதுடில்லி:நகர் முழுதும் 'கவாச் 7.0' என்ற அதிரடி சோதனை நடவடிக்கை புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெற்றது. மொத்தம் 784 இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை நடத்தி 90 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்தனர்.அப்போது, 553 கிராம் ஹெராயின், 43 கிலோகிராம் கஞ்சா, 199 கிராம் கொகையின், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுதவிர, கலால் சட்டத்தின் கீழ் 157 வழக்குகள் பதிவு செய்து, 161 பேர் கைது செய்யப்பட்டனர். 33,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கூடுதலாக, 27 ஆயுதச் சட்ட வழக்குகளில் 29 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ரிவால்வர், ஒரு கைத்துப்பாக்கி, ஆறு நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள், 11 தோட்டாக்கள், 18 கத்திகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மொத்தம் 909 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். மூன்று சூதாட்ட வழக்குகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கல்வி நிறுவனங்களை 100 மீட்டர் சுற்றளவுக்குள் புகையிலை விற்பனை செய்ததற்காக 1,407 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை