உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் சேத்தன் சந்திரா மீது 20 பேர் கும்பல் தாக்குதல்

நடிகர் சேத்தன் சந்திரா மீது 20 பேர் கும்பல் தாக்குதல்

பெங்களூரு: கன்னட நடிகர் சேத்தன் சந்திரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.நடிகர் சேத்தன் சந்திரா, கன்னடத்தில் ஜாத்ரே, பிரேமிசம், பிளஸ் உள்ளிட்ட, சில படங்களில் நடித்துள்ளார். இவரை மர்மகும்பல் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து, நடிகர் சேத்தன் சந்திரா, நேற்று கூறியதாவது:கக்கலிபுரா அருகில், நேற்று முன் தினம் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அடையாளம் தெரியாத சிலர், குடிபோதையில் என் காரை வழிமறித்தனர். என்னிடம் கொள்ளையடிக்க முயற்சித்தனர். நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். அப்போது மேலும் 20 பேர், என்னை தாக்கிவிட்டு தப்பியோடினர். அபாயத்தில் இருந்து தப்பினேன். தாக்குதலுக்கு ஆளான பின், போலீஸ் நிலையத்துக்கு சென்றேன், காயங்களுடன் இருந்த என்னை, முதலில் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும்படி போலீசார் கூறினர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ