உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவனுக்கு வீட்டிலேயே மது: மகளிருக்கு மந்திரி யோசனை

கணவனுக்கு வீட்டிலேயே மது: மகளிருக்கு மந்திரி யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: “வெளியில் சென்று மது அருந்தும் கணவரை, பெண்கள் தங்கள் வீட்டிலேயே குடும்பத்தினர் முன்னிலையில் மது அருந்தும்படி கேட்டுக்கொள்ளுங்கள். இதனால் வெட்கப்பட்டு, அவர்கள் மெதுவாக குடிப்பழக்கத்தை விட்டுவிடுவர்,” என மத்திய பிரதேச அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹா அறிவுரை வழங்கினார்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள போபாலில் சமீபத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், மாநில அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹா பேசினார்.அவர் பேசுகையில், “குடிக்கு அடிமையான ஒருவரை அதில் இருந்து மீட்பதில், அவரது வீட்டைச் சேர்ந்த தாய், தங்கை போன்ற பெண்களின் முயற்சி பெரும் பங்கு வகிக்கிறது. முதலில் கணவரிடம் வெளியில் சென்று குடிக்கக் கூடாது என கூறுங்கள். அப்படியே குடிக்க விரும்பினால், வீட்டில் எங்கள் முன்னாலேயே குடியுங்கள் என்று கூறுங்கள். இதனால் அவர்கள் குடிக்கும் அளவு குறையும்.“குழந்தைகள் முன்னே குடிக்க அசிங்கப்படுவர். குழந்தையும் எதிர்காலத்தில் குடிக்க துவங்கும் என்ற அச்சம் ஏற்படும். இதனால் அவர்கள் குடியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவர்,” என்றார்.இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவுரைக்கு மத்திய பிரதேச மகளிர் கமிஷன் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சங்கீதா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைச்சரின் அறிவுரையை பின்பற்றினால் வீட்டில் சண்டை தான் ஏற்படும். இந்த கருத்துக்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். வீட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு முக்கிய காரணமே மது தான். மத்திய பிரதேச மகளிர் கமிஷனில் மதுபோதையில் கணவர் அடித்ததாக 17,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன,” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மோகனசுந்தரம்
ஜூன் 30, 2024 13:11

அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. வீட்டில் குடி என்றால் எல்லோர் முன்னும் குடிக்கும் பொழுது அவருக்கு கூச்ச சுபாவம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தானே கூறுகிறார். அதனால் அவர் திருந்தவும் சந்தர்ப்பம் ஏற்படும். எதற்கெடுத்தாலும் பிஜேபியை கடித்து குதற வேண்டாம்


Rathinasabapathi Ramasamy
ஜூலை 01, 2024 08:16

குடிகாரனுக்கு கூச்சம் இருக்குதா? போயா போய் வேலைய பாரு.


venugopal s
ஜூன் 30, 2024 11:01

பாஜக அமைச்சர்களின் அறிவுத்திறன் வியக்க வைக்கிறது!


subramanian
ஜூன் 30, 2024 15:03

உன்னுடைய குயுக்தி புத்தி உன்னை அழிவு பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 30, 2024 07:48

ஆக குடும்பத்தில் உள்ள அனைவரும் குடித்து பழக வேண்டும் என்று அருமையான யோசனையை மாண்புமிகு மந்திரி சொல்லி இருக்கிறார். இங்கே தமிழகத்தில் ஒரு மாண்புமிகு மந்திரி டாஸ்மாக் மதுவில் கிக் குறைவாக உள்ளது என்று கூறி கிக்கை அதிகப்படுத்த பரிந்துரை செய்கிறார். உடல் களைப்பு போக குடிக்கிறார்கள் என்று கூறுகிறார். இவர் கூறுவதை பார்த்தால் எல்லா மந்திரிகளும் உடல் களைப்பு போக தினமும் குடிக்கிறார்கள் போல். எந்த பிராண்ட் எந்த வகை என்று கூறினால் மாண்புமிகு மகாஜனங்களுக்கு உதவியாக இருக்கும்.


Ravichandran S
ஜூன் 30, 2024 07:31

அரசு வருமானத்துக்கு என்ன செய்வது


Velan
ஜூன் 30, 2024 04:41

இந்த கருத்து வேலைக்காகாது


தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2024 02:08

மிக அருமையான யோசனையை கூறியுள்ளார். குடியை கொஞ்சம் கொஞ்சமாக தான் திருத்தமுடியும். புத்திசாலி அமைச்சர்.


Rathinasabapathi Ramasamy
ஜூலை 01, 2024 08:24

ஹா ஹா ஹா அறிவோ அறிவு அண்ணா. உங்களுக்கு. கல்வெட்டில் செதுக்கி வைக்கன்னா வருங்கால சந்ததிங்க படித்து தெரிந்து கொள்ளட்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை