மேலும் செய்திகள்
வாசகர்கள் மனதில் நீங்கா இதழ்
06-Sep-2024
வாசகர்களின் பேரன்புடனும், ஆதரவுடனும், 73வது பிறந்த நாளை கொண்டாடி, 74ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது 'தினமலர்'. இந்த வெற்றி பயணத்திற்கு காரணமான வாசகர்களை நன்றியோடு தினமலர் நினைத்து பார்க்கிறது. தங்கள் மனங்கவர்ந்த நாளிதழ் பற்றி மனம் திறந்து தெரிவிக்கும் நீண்டகால வாசகர்களின் வாழ்த்துகள் வருமாறு:8_Mayilsamy Annadurai* உண்மையின் உரைகல்73வது பிறந்த நாள் காணும் உண்மையின் உரைகல் 'தினமலர்' நாளேட்டுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு மக்கள் பணியில். பெங்களூரில் தினமும் படித்து வருகின்றேன். அறிவியல், கல்வி, நாட்டு நடப்பு என அனைத்து துறை செய்திகளை காண முடிகிறது.மயில்சாமி அண்ணாதுரை,இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி8_Ramprasath Manohar IAS* 73 வயது இளைஞர்நம்மை சுற்றி அன்றாடம் என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும் என்பதை தினமலரை படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு செய்தியில் துல்லியமாகவும், உண்மையாகவும் இருக்கும். மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருவதால், 73 ஆண்டுகளாக இளமையாகவே உள்ளது சிறப்பு.ராம்பிரசாத் மனோகர்,தலைவர்,பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம்8_Ramesh Kumar IFS* காலையில் விழிப்புதமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக சேவை செய்து வருவதற்காக வாழ்த்துகள். தினமலர் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் மற்றும் அதிக வாசகர்களை அடைய வாழ்த்துகள். புதுச்சேரியில் எனது தந்தை, இப்போதும் தினமலரை படித்து விட்டு தான் மற்ற வேலைகளை பார்க்கிறார் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.ரமேஷ்குமார்,புலிகள் திட்ட இயக்குனர்,மைசூரு மண்டலம்8_Dilli Babu* முதுமை முதல் இளமை வரைதலைப்பில் அடர்த்தி, படத்தில் மிளர்வு, செய்தியில் தெளிவு, நிகழ்வுகளில் செறிவு என நாளிதழின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரிலும் புதுமைகளை சுமந்து, சாய்வு நாற்காலி தலைமுறை முதல் தொடுதிரை தலைமுறை வரை அடுத்தகட்ட வாசிப்பு அனுபவத்தை தரும் தினமலர் பல நூற்றாண்டுகள் அச்சுப்பணியைத் தொடர உச்சி முகர்ந்த வாழ்த்துகள்.- டாக்டர் வி.டில்லிபாபு,ராணுவ விஞ்ஞானி8_Ragapriya* சிறந்த பகுப்பாய்வுஉண்மையான மற்றும் சிறந்த பகுப்பாய்வுகளை கொண்ட செய்திகளை வெளியிடும் செய்தித்தாள் என்றால் அது தினமலர் மட்டுமே. 73வது பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். தொடர்ந்து சமுதாய நல செய்திகளை வெளியிட்டு வருவதால், மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சென்னையில் இருந்த போதும், தற்போது பெங்களூரில் இருக்கும் போதும், தினமலரை தொடர்ந்து படித்து வருகின்றோம்.ராகபிரியா,கமிஷனர்,தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனம், கர்நாடக அரசு8_Lakshmi Priya* மக்கள் நம்பிக்கைமக்களுக்கு நம்பகமான, தரமான செய்திகளை வழங்கியதற்காக என் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல தசாப்தங்களாக, தினமலர் நேர்மையான, துல்லியமான மற்றும் ஆழ்ந்த செய்திகளை வழங்கி, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற சிறந்த செய்தி ஊடகமாக திகழ்ந்து வருகிறது. சமூகத்தின் விழிப்புணர்வை உருவாக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள்.லட்சுமி பிரியா,மாவட்ட கலெக்டர், உத்தர கன்னடா8_Poovitha* மக்கள் பணி!தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று, நாட்டு நடப்பை உண்மையின் தரம் மாறாமல் எங்கள் இல்லங்களுக்கே எடுத்து வரும் தினமலர் பணி இன்னும் பல்லாண்டு சிறக்க உளம் கனிந்த வாழ்த்துகள். என்றும் மக்கள் பணியில் அக்கறை கொண்டுள்ளதால், மக்கள் விரும்பி படிப்பது சிறப்பு.பூவிதா,கர்நாடக தலைமை செயலரின் சிறப்பு அதிகாரி,பெங்களூரு8_Sriramprasad Auditor* பாரபட்சமற்ற இதழ்!தேசத்தின் நலன்களுக்காக பாடுபடும் தரம் மற்றும் பாரபட்சமற்ற இதழியலுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு வாழ்த்துகள். வரும் ஆண்டுகளிலும் தினமலர் மேலும், மேலும் வளர்ந்து சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். கடவுளையும் வேண்டுகிறேன்.ஸ்ரீராம்பிரசாத்,ஆடிட்டர்,இந்திராநகர்8_Kadaiyam Arumugam* உண்மைக்கு ஏது வயது!சிறுவர்களின் சிந்தனைச் சோலை. இளைஞர்களின் வழிகாட்டி. பாமரரும் மனம் விரும்பும் உண்மையின் உரைகல்லுக்கு வயது 73! உண்மைக்கு ஏது வயது! 74 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தினமலர் நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!கடையம் ஆறுமுகம்,இயக்குனர்,பன்னாட்டு தனியார் நிறுவனம்8_Noel Nishanth* எனது நாளிதழ்!இணைய வெளியீடுகள் இல்லாத காலத்திலும் தினமலர் தான் பல ஆண்டுகளாக எனது நாளிதழ். செய்திகள் உண்மை மற்றும் நம்பகமானவை மட்டுமல்ல, அறிவொளி மற்றும் அறிவைக் கட்டியெழுப்புகின்றன. நல்ல வேலையைத் தொடருங்கள். நாங்கள் நம்பக்கூடிய உலகச் செய்திகளை அன்றாடம் எங்கள் வீட்டு வாசலுக்கு அனுப்புங்கள்.நோயல் நிசாந்த்,விமான பைலட்,பெங்களூரு8_Ragavendra* உரக்க சொல்லும்!மக்களுக்கு மகத்தான நற்பணியை செய்து வரும் தினமலர் நாளிதழ் மேலும் பல நூற்றாண்டை கொண்டாட வாழ்த்துகள். உண்மையான செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் உரக்கச் சொல்லும் தினமலர் நாளிதழின் பணி மிகவும் சிறப்பானது. வாசகர்களையும் மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பலவகை போட்டிகளை நடத்தி பரிசுகளை தந்து உற்சாகப்படுத்தும் நாளிதழின் சிறப்பம்சம்.ராகவேந்திரா,பாடகர், பெங்களூரு8_Palvannan* 11வயதில் ஆரம்பம்!திருநெல்வேலியில் எனது 11வது வயதில் சிறுவர் மலருடன் தொடங்கிய பயணம், தற்போது பெங்களூரில் 36வது வயதிலும் தொடர்கிறது. ஏறக்குறைய 25 ஆண்டுகள் தினமலரின் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன். தினமலரின் சேவை இந்தியா மட்டுமின்றி, உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மலர வாழ்த்துகிறேன்.ச.பால்வண்ணன்,மேலாளர்,தனியார் நிறுவனம்,பெங்களூரு..............................................8_Kalyankumarதினமும் மலர்வாய் தினமலரே.!***********நாடென்றால் பாரதம்!ஏடென்றால் தினமலர்!தேடென்றால் ஆன்மிகம்தினம் மலரும் தெய்வீகம்!திருவோங்கும் நெல்லைதேன்தமிழர் முல்லை..அருளோங்கும் ஆசிரியர்தந்த அறிவாயுதமேஅதிகாலை மலர்ந்தேஅறிவொளியை ஏற்றிபுதுவிதமாய் செய்திபொழுதெல்லாம் பரவஎதைச்சொல்லும் போதும்..தைரியமாய் முழங்கும்!சமுதாயம் முழுதும்உயர்வுபெற வழங்கும்!திருமயம் புலவர் தினம்தினமலரைப் பூசித்தார்!அவர் மகன் அடியவனும்அனுதினமும் வாசிப்பேன்!ஒளிமயமாய் தமிழகம்ஒளிர்ந்திட மலருகின்றதினமலரை வாசிப்போம்!தினமலரை நேசிப்போம்!தினமலரே.. தினமலரே..தென்னவரின் புதுமலரே!மனக்குளத்தில் மலர்ந்தாயே..மறவாதே போற்றுகிறோம்!எழுகின்ற காலைக்கதிர்எங்களுயிர் தினமலரே!எழுபத்து மூன்று கடந்தேபலநுாறு ஆண்டுகள் வாழி!பொற்கிழிப் பாவலர்வே.கல்யாண்குமார் பெங்களூரூ. - நமது நிருபர் -
06-Sep-2024