உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0ன் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 1 கோடி வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டு உள்ளது.இதில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசின் 2.2 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியும் அடங்கும். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும், வட்டி மானியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில், கூடுதலாக மூன்று கோடி வீடுகள் கட்டப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளன.தொழில்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்கும் இடங்களுடன் கூடிய வாடகை வீடுகள், பொது - தனியார் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தித் தரப்படும்.மேம்பட்ட தன்மையுடன் திறமையான மற்றும் வெளிப்படையான வாடகை வீட்டுச் சந்தைகளுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
ஜூலை 24, 2024 10:10

2023 லேயே அல்லாருக்கும் வீடு கட்டிக் குடுத்துருவோம்னு வாக்குறுதியை நிறைவேத்தியாச்சே கோவாலு.


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 12:16

இடைல COVID 19 வந்து கெடுத்து விட்டதே.


Kasimani Baskaran
ஜூலை 24, 2024 05:44

கந்து வட்டியில்லாமல் ஏழைகளுக்கு வீடுகட்ட மானியத்துடன் கடன் என்பது மிகச்சிறப்பான திட்டம். பணக்காரர்களுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ