உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித் ஷா - குமாரசாமி ரகசிய சந்திப்பு பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்?

அமித் ஷா - குமாரசாமி ரகசிய சந்திப்பு பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்?

பெங்களூரு : பெங்களூருக்கு திடீரென வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன், நள்ளிரவில் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் பலாத்கார வழக்கு விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற பேச்சு ஓடியது.இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவு அவசரமாக பெங்களூரு வந்தார். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

மூத்த தலைவர்கள்

அவர் வருவதை முன்கூட்டியே அறிந்த, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியும், அதே ஹோட்டலில் தங்கி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.பின், அமித் ஷா - குமாரசாமி ரகசியமாக ஆலோசனை நடத்தினர். இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரஜ்வல் பலாத்கார விவகாரம் தொடர்பாகவும், இவரது தந்தை ரேவண்ணா கைது விவகாரம் தொடர்பாகவும் விரிவாக பேசி உள்ளனர். தன் தந்தை தேவகவுடாவின் மனநிலை குறித்து, குமாரசாமி விளக்கி உள்ளார். 'சட்டப்படி சந்தியுங்கள்' என்று சமாதானப்படுத்தி உள்ளார். இதனால், குமாரசாமி, ஓரளவு மனதை தேற்றி கொண்டார்.

நம்பிக்கை

கஷ்டமான சூழ்நிலையில் உள்ள ம.ஜ.த.,வுடன் பா.ஜ., துணை நிற்கும் என்றும்; கூட்டணி தொடரும் என்றும் அமித் ஷா நம்பிக்கை அளித்துள்ளதால் ம.ஜ.த.,வினர் நிம்மதி அடைந்துள்ளனர். இது தவிர, சில முக்கிய விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.இரவில் ஹோட்டலிலேயே தங்கிய அமித் ஷா, நேற்று காலை பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து, தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ