உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேலும் ஒரு பாலம் பீஹாரில் இடிந்து விழுந்தது

மேலும் ஒரு பாலம் பீஹாரில் இடிந்து விழுந்தது

பாட்னா : பீஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள கன்டாக் கால்வாய் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதேதி பஜார் சந்தைகளை சிவான் மாவட்டம் தர்பங்காவில் உள்ள ராம்கார் பஞ்சாயத்துடன் இணைக்கிறது. இந்த நிலையில் நேற்று இந்த பாலம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.பழமையான இந்த பாலத்தை முறையாக பராமரிக்காததாலும், பாலத்தை தாங்கும் துாணை சுற்றி அரிப்பு ஏற்பட்டதாலும், இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிஉள்ளனர். சில நாட்களுக்கு முன் இங்குள்ள அராரியா பகுதியில் பாயும் பக்ரா ஆற்றின் மீது, 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருந்த பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரு பாலங்கள் இடிந்து விழுந்தது, பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி