உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள்: ஹிந்தி படத்தை வெளியிட தடை

முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள்: ஹிந்தி படத்தை வெளியிட தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக, ஹமாரே பாராஹ் என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.பிரபல பாலிவுட் நடிகர் அன்னுர கபூர் உள்ளிட்டோர் நடிக்கும், ஹமாரே பாராஹ் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சமீபத்தில் வெளியாயின. இதில், முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.முதலில் இந்தப் படத்தை ஜூன், 14ம் தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்திருந்தது. மேலும், இந்தப் படத்தை பார்த்து கருத்து தெரிவிக்கும்படி, திரைப்பட தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கைக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது.அதை ஏற்காத உயர் நீதிமன்றம், படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதே நேரத்தில் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய சில வசனங்கள், காட்சிகளை நீக்கும்படி உத்தரவிட்டுஇருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளை நாங்கள் பார்த்தோம். நீங்கள் கூறியதுபோல் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்படவில்லை. முன்னோட்ட காட்சிகளே இவ்வளவு ஆட்சேபகரமாக இருந்தால், படம் எப்படி இருக்கும்.நீதிமன்ற உத்தரவிற்குப் பின் சில காட்சிகளை, வசனங்களை நீக்குவதாகக் கூறியுள்ளபோதே நீங்கள் தோற்றுவிட்டீர்கள். ஆட்சேபனைக்குரிய, சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் உள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பேசும் தமிழன்
ஜூன் 14, 2024 19:39

இதே இந்து மதத்தைச் பற்றி தவறாக படம் எடுத்தால் அதை வெளியிடலாம்.... அப்போது இதே நீதி இல்லாத மன்றங்கள் தூங்கி கொண்டு இருக்கும்.


Mohamed Ibrahim
ஜூன் 14, 2024 18:31

முஸ்லீம்களை நீங்கள் யாரும் படம் எடுத்து திருத்த தேவையில்லை... இஸ்லாம் பரிபூரண மார்க்கம்...


பேசும் தமிழன்
ஜூன் 14, 2024 19:42

பிறகென்ன கஷ்டம்.... படத்தை வெளியிட வேண்டியது தானே ? ?


சித்தறஞ்சன்
ஜூன் 14, 2024 19:54

நீங்கள் எங்கே திருந்த போகிறீர்கள். குண்டு வைப்பது தொழிலாக போய்விட்டது உங்களுக்கு


Barakat Ali
ஜூன் 14, 2024 13:38

அந்த பயம் இருக்கட்டும்.. ஹிந்துக்களிடம் அந்த ஒற்றுமை, எதிர்ப்புணர்வு கிஞ்சித்தும் இல்லாததால் சோஷல் மீடியாவில் மட்டும் ஆவேசம் காட்டுவீர்கள் உங்களை பிரித்து மேய்கிறார்கள் .....


Tetra
ஜூன் 14, 2024 12:22

இதுவே ஹிந்துக்களை நிந்தித்து படம் வெளியிட்டிருந்தால் உநீம கருத்து சுதந்திரம் என்று சொல்லியிருக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 14, 2024 12:10

செக் ரிட்டர்ன் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கத் தெரியாமல் லோக் அதாலத்துக்கு தள்ளி விடும் நீதிமன்றங்கள் விளம்பரத்துக்காக இது போன்று வழக்குகளை விசாரிக்கும்.


ram
ஜூன் 14, 2024 11:02

இங்கு இருக்கும் நீதி மன்றங்கள் எதற்கு எவ்வளுவு பயம் சிறுபான்மையினரை பார்த்து அந்த படத்தில் அப்படி ஒன்றும் இல்லை, எதற்காக தடை.


GMM
ஜூன் 14, 2024 10:33

முஸ்லிமுக்கு எதிரான கட்சிகள் மட்டும் பார்த்தால் போதுமா? எப்போதும் ஒரு மனு தொடர்பான அனைத்து அம்சங்களும் ஆராய வேண்டும். குழந்தை, சமூகத்திற்கு எதிராக வெளிநாட்டு காட்சிகள் டிவியில் அதிகம். சிந்தனை திறன் மழுங்க செய்யும் கோமாளி படங்கள். பெற்றோர்கள் அறிவுரை குழந்தைகள் கேட்க, தடுக்க முடியவில்லை. தனி அமைப்பு வன்மம், மூளை சலவை.. போன்றவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து, தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், அடுத்த தலைமுறை அமைதியாக வாழ்வது கடினம்.


Sampath Kumar
ஜூன் 14, 2024 10:22

ஏத்தனையோ சம்பவம் நாட்டில் ஏதேதோ காரணத்திற்கு நடக்குது எல்லாம் காரணம் காரியமும் ஏற்புடையது ஆவதில்லை மதம் சாதி, மொழி என்று பிரித்து பார்க்க படுகிறது அதனால் இந்த சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை இதுக்கு காரணம் யாரு? ஏது? என்று எல்லோருக்கும் தெரிந்து இருந்தும்....


Shekar
ஜூன் 14, 2024 09:32

இந்துக்களை எவ்வளவு கேவலமாவும் பேசுங்க படம் எடுங்க, அது உங்க கருத்து சுதந்திரம். ஆனால் சிறுபான்மை மதங்களை பற்றி எதுவும் பேசினால் பிச்சிப்புடுவோம் பிச்சி. அப்படித்தானே யுவர் ஆனர்


Duruvesan
ஜூன் 14, 2024 08:59

ஹிந்து குறிப்பா ... கேவல படுத்தி படம் எடுத்தா நாங்க அவார்ட் கொடுப்போம்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ