உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலில் எதுவும் நடக்கலாம்! சரத் பவார் பாராட்டுக்கு பட்னவிஸ் பதில்

அரசியலில் எதுவும் நடக்கலாம்! சரத் பவார் பாராட்டுக்கு பட்னவிஸ் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சை சரத் பவார் புகழ்ந்தது குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலளித்துள்ளார். தனது சித்தாந்தத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அது போன்று நாமும் செயல்பட வேண்டும் என்று தேசியவாத காங்.(சரத் பவார் அணி) தலைவர் சரத்பவார் பாராட்டி இருந்தார். அவரது பாராட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந் நிலையில், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சை சரத் பவார் புகழ்ந்தது குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலளித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது; சரத்பவார் மிகவும் புத்திசாலி. நாம் உருவாக்கிய சூழல் இப்போது ஒரு நொடியில் மாறி போனது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும் என்பதால் அப்படி சொல்லி இருக்கலாம். சில சமயம் நாம் நமது போட்டியாளர்களை பாராட்ட வேண்டும். எனவே அவர் அப்படி சொல்லி இருக்கலாம். எதுவும் நடக்காது என்று நாம் எதையும் நினைக்கவே கூடாது. எதுவும் நடக்கலாம். இது தான் நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. உத்தவ் தாக்கரே அங்கு செல்கிறார், அஜித்பவார் இங்கே வருகிறார். அரசியலில் இது நடக்காது என்று உறுதியாக முடிவெடுத்தால் அரசியல் சூழல் உங்களை எங்கேயோ கொண்டு செல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
ஜன 11, 2025 12:47

கேனுசரு தாத்தாவும் சம்பாரிக்க விரும்பறார் .... அவரையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க ..... துணை இணை முதலமைச்சரா ஆக்கி சாப்புட விடுங்க ..... எங்க மன்னர் குடும்பம் மாதிரிதான் அந்த குடும்பமும் .... அதிகாரத்துல இல்லைன்னா தவிச்சு போயிரும் .....


Ramesh Sargam
ஜன 11, 2025 12:21

ஆமாம், அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் வயது முதிர்ந்த ஷரத் பவார், கார்கே, ஏன் சொல்லப்போனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்றவர்களால் நடக்க கூட திராணி இல்லை. ஆனாலும் அரசியலை விட்டு விலகமாட்டார்கள் Stretcher -இல் படுத்துக்கொண்டே ஆட்சி புரிவார்கள். அவ்வளவு ஆசை பதவியின் மேல்...


அப்பாவி
ஜன 11, 2025 12:18

வெவஸ்தை இருந்தால்தானே...


Barakat Ali
ஜன 11, 2025 11:15

கவலைப்படாதீங்க, அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் ராகுலும், சோனியாவும் கூட பாஜகவில் சேர வாய்ப்பு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை