உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் சுங்கச்சாவடிகள் அமைப்பதா? ஐகோர்ட் விளாசல்

பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் சுங்கச்சாவடிகள் அமைப்பதா? ஐகோர்ட் விளாசல்

ஜம்மு: பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன், காளான்கள் போல சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதாக ஜம்மு - -காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு - -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், டில்லி -- அமிர்தசரஸ் -- கத்ரா விரைவுச் சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவு சாலையுடன் இணைக்கும் ஜம்மு - -பதன்கோட் நெடுஞ்சாலையில் லகான்பூர், பான் இடையே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதை ரத்து செய்யக்கோரி ஜம்மு -- காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு விபரம்:மக்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன் காளான்கள் போல சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. சுங்கச்சாவடி கட்டணங்களால் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மட்டுமல்லாமல், தனியார் ஒப்பந்ததாரர்களும் கோடிக்கணக்கில் பணம் குவித்து, தங்களை வளமாக்கிக் கொள்கின்றனர். மக்களிடம் பணம் வசூலிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படக் கூடாது. சுங்கக் கட்டணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.ஜம்மு -- காஷ்மீரில் லகான்பூர், பான் சுங்கச்சாவடிகளில் கடந்த 2024, ஜன., 26க்கு முன் இருந்த கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.எந்த சார்பும் இல்லாத சுயமான ஆய்வாளரைக் கொண்டு சுங்கக்கட்டணங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஜம்மு -- காஷ்மீரில் 60 கி.மீ., இடைவெளிக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக் கூடாது. அப்படி ஏதேனும் இருந்தால், இரண்டு மாதங்களுக்குள் கூடுதல் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும். குற்றப் பின்னணி உடையவர்களை சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமிக்கக் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவைத் தொடர்ந்து, வைஷ்ணோ தேவி கோவில் உள்ளிட்ட ஜம்மு - -காஷ்மீரில் உள்ள புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் பயன் அடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Minimole P C
பிப் 28, 2025 08:05

First bring transperency in toll collection. once if it is brought out, then things to be done will be known. One thing I cannot understand that a minister, Nitin Katkari known for his honesty, how he allows this. Definitely beyond his capacity some thing does this . Court can do something. But they are also incabable. Eg. Chennai-Vellore highway.


P. SRINIVASAN
பிப் 27, 2025 12:24

நான் அடிக்கிறமாதிரி நடிப்பேன், நீ வலிக்கிறமாதிரி நடிக்கணும்


R S BALA
பிப் 27, 2025 12:11

எந்த சார்பும் இல்லாத சுயமான ஆய்வாளரைக் கொண்டு... அப்படி ஒரு ஆய்வாளரை எப்படி கண்டுபிடிப்பது அதன் அளவுகோல் என்ன? அதற்கு என்ன ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும்..


KRISHNAN R
பிப் 27, 2025 11:17

கோர்ட் அப்போ அப்போ ஏதாவது ஒன்று இப்படி கேட்கத்தான் முடியும். அப்பிரம் அது காத்துல போய்விடும்.. என்ன செய்வது. இங்கு கொடி கட்டிய கார்கள் பற்றி கோர்ட் சொல்லிச்சு யார் கேட்டா? இப்போ கொடி கார்களில்.... போலீஸ் போல சிவப்பு மற்றும் நீல லைட் எரியுது. கட்சிக்காரர்கள் எப்போ போலிசு ஆனார்கள் என்று தெரியவில்லை.


J.Isaac
பிப் 27, 2025 11:12

ஒன்றிய அரசின் பகல் கொள்ளை. சுங்கச்சாவடிகள் அனைத்தும் வெவ்வேறு தனியார் பெயரில்.ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் வெவ்வேறு சுங்க கட்டணம். மதத்தை வைத்து மொழியை வைத்து நடுத்தர ஏழை மக்களை தூண்டிவிட்டு வஞ்சிக்கிறது


M.Srinivasan
பிப் 27, 2025 11:08

சபாஷ் சரியான நெத்தியடி தீர்ப்பு. இந்த தீர்ப்பு நாடுமுழுவதும் செயல்படுத்த வேண்டும்.


Mohan
பிப் 27, 2025 11:27

அட கொத்தடிமையே ...பணத்துக்காக டாஸ்மாக் விப்பீங்களா அப்டின்னு கேட்டிருந்தா நல்ல இருந்திருக்கும் ..


Nellai tamilan
பிப் 27, 2025 11:07

இந்த உத்தரவு இந்தியா முழுவதற்கும் அமல்படுத்தப்பட வேண்டும். சுங்கசாவடியில் பெரிய டிஜிட்டல் பலகை வைக்கப்படவேண்டும். அந்த பலகையில் தினமும் எவ்வளவு வசூல் நடந்தது மற்றும் சுங்க சாவடி மூடப்படும் கடைசி நாளும் குறிப்பிடப்பட வேண்டும்.


N Annamalai
மார் 25, 2025 08:02

தமிழகத்தில் 32 சுங்க சாவடிகள் மூடி இருக்க வேண்டும் .யார் காசு யாருக்கு காசு போகிறது ?.


Ethiraj
பிப் 27, 2025 10:10

Court has the right to ask for the data of toll collections as well as demand on what formula the money is collected. Blaming NHAI and govt without evidence based on newspaper and complaints is surprising Capital cost ,maintenance cost,interest on capital ,man power ,profit all to be taken into account If there is fraud punish officials and contractors.


Dharmavaan
பிப் 27, 2025 10:05

இதை ஏன் உச்ச நீதி சொல்லக்கூடாது நாடு பூராவும் செல்லும்படி


Sampath Kumar
பிப் 27, 2025 09:58

கோமாளிகளும் மதவெறியர்களும், சம்பந்தம் இல்லாதவர்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத பதவியில் அமர்வதும் இந்த பிஜேபி அரசின் கையாலாகாத தனம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முன்னேறி கொண்டு இருப்பது அதை விட கொடுமை இப்படியே போனால் நாடு தாங்காது பிஜேபி அரசு நீக்க படவேண்டிய ஓன்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை