உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி

ஸ்ரீநகர், யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், இரு நாட்கள் பயணமாக, பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். ஸ்ரீநகரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான, 84 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.இதைத் தொடர்ந்து நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன. இங்குள்ள மக்கள், ஓட்டுகள் வாயிலாக அவர்கள் விரும்பும் புதிய அரசை தேர்ந்தெடுப்பர். மேலும், ஜம்மு - காஷ் மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில், சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை, மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. ஜம்மு- - காஷ்மீரின் எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். லோக்சபா தேர்தலில் இங்குள்ள இளைஞர்கள் அதிகளவில் ஓட்டளித்து, ஜனநாயகத்தின் வெற்றியை உறுதி செய்தனர். அவர்களுக்கு என் பாராட்டுகள். ஜம்மு - காஷ்மீரில் நிரந்தரமாக அமைதி நிலைநாட்டப்படும். அதற்கான நடவடிக்கைகள், கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளன. இதை உலகமே பார்த்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஸ்ரீநகரில் இன்று நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி