உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வன்முறையை தவிர்க்கணும்!: மே.வங்கத்திற்கு கூடுதல் துணை ராணுவப் படையை அனுப்ப உத்தரவு

வன்முறையை தவிர்க்கணும்!: மே.வங்கத்திற்கு கூடுதல் துணை ராணுவப் படையை அனுப்ப உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்துக்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்ப வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்பாக, மேற்குவங்க மாநிலத்தில் கூடுதல் துணை ராணுவப் படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தலுக்காக நடக்கும் வன்முறைகளை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
ஏப் 09, 2024 22:07

மேற்கு வங்கத்தில் வன்முறை நடப்பது சாதாரண விஷயம் தான் அதனால் பாதுகாப்பு அதிகம் தேவைப்படும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி