உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும்! கலவரம்: 6 பேர் பலி

மணிப்பூரில் மீண்டும்! கலவரம்: 6 பேர் பலி

இம்பால் : மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நேற்று காலை நடந்த தாக்குதலில், ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக, ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ld1w4rr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வன்முறை

இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் சிறிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் நகரில் ராக்கெட் வாயிலாக, கூகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் சமீபத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், மெய்டி சமூகத்தைச் சேர்ந்த முதியவர் உட்பட இருவர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று காலை மீண்டும் வன்முறை வெடித்தது. ஜிரிபாம் மாவட்டத்தின் நுங்சாப்பி என்ற கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் புகுந்த ஆயுதமேந்திய நபர்கள், அங்கு துாங்கிக் கொண்டிருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை, கூகி சமூகத்தின் ஆயுதமேந்திய குழு நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, ஜிரிபாம் மாவட்ட தலைமையகத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், மலைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் கூகி சமூகத்தின் ஆயுதமேந்திய குழுவுக்கும், மெய்டி சமூகத்தின் ஆயுதமேந்திய குழுவுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தகவலறிந்த போலீசார், ஆயுதமேந்திய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, அவர்கள் தப்பிச் சென்றனர்.ஜிரிபாம் மாவட்டத்தில் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப, கடந்த மாதம், மெய்டி - ஹமர் பிரிவுகளின் பிரதி நிதிகள் ஒப்புக் கொண்டனர். எனினும், சுராசந்த்பூரை தளமாகக் கொண்ட கூகி குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக, ஜிரிபாம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்து வருகிறது.

அவசர ஆலோசனை

மணிப்பூரில் மீண்டும் கலவரம் துவங்கியுள்ள நிலையில், இந்த முறை, ட்ரோன், ராக்கெட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை ஆயுதமேந்திய குழுக்கள் பயன்படுத்தி வருவது, பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக உள்ளது. ராக்கெட்டுகள் அதிக துாரம் சென்று தாக்கும் வகையில், அதற்கேற்ப அதில் வெடிமருந்துகளை நிரப்புவதற்கான பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, கிழக்கு இம்பால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இரவு முழுதும் விளக்குகளை அணைத்து விட்டு அச்சத்துடன் கண் விழித்திருந்தனர்.இதற்கிடையே, சுராசந்த்பூர் மாவட்டத்தின் முல்சங், லைக்கா முல்சவு ஆகிய இடங்களில் வன்முறையாளர்களின் மூன்று பதுங்கு குழிகளை, பாதுகாப்புப் படையினர் நேற்று அழித்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.'மணிப்பூரில் இன்னும் ஆறு மாதங்களில் முழுமையாக அமைதி திரும்பும்' என, முதல்வர் பைரேன் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கலவரம் வெடித்திருப்பது பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதற்காக மாநில அமைச்சரவை கூட்டத்தை நேற்று அவசரமாக கூட்டி, முதல்வர் பைரேன் சிங் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து கவர்னர் லக் ஷ்மன் ஆச்சார்யாவை அவர் சந்தித்து பேசினார்.

ரோந்து பணியில் ஹெலிகாப்டர்

இம்பால் மேற்கு மாவட்டத்தில், ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் வாயிலாக, ஒரு வாரத்துக்கு முன், கிராமங்கள் மீது கூகி சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், ட்ரோன்களை கண்டறிந்து தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை, பாதுகாப்புப் படையினர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டில், கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்துவது, இதுவே முதன்முறை.மேலும், மணிப்பூரின் பல்வேறு இடங்களில், நம் ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சந்தேகத்துக்குரிய பகுதிகள் மற்றும் மலைகளில், ட்ரோன் வாயிலாகவும் கண்காணிப்பு நடந்து வருகிறது. வன்முறையை பரப்பும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் செய்திகளையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sampath Kumar
செப் 09, 2024 08:05

உளூரில் vilai போகாத maadu vaeliooril nalla villaiku போகுது inthavn pisthada


Kasimani Baskaran
செப் 09, 2024 05:58

தற்சமயம் அமைதியில்லாமல் இருக்கும் மியான்மரில் இருந்து எந்த வித ஆவணங்களும் இல்லாமல் தாராளமாக இந்தியாவுக்குள் வரக்கூடிய நிலை இருக்கிறது. அதை முதலில் நிறுத்த வேண்டும். உள்துறை அமைச்சர் சென்று ஆய்வு செய்த பின்னர் பல பகுதிகளில் வேலியமைக்க ஆரபித்து விட்டார்கள். காங்கிரஸ் கூடுதலாக கிறிஸ்தவர்களை விட்டு கலவரங்களை தூண்டுகிறது. இராகுலின் குடியுரிமையை நீக்கினால் நிலைமை உடனே மேம்படும்.


K.n. Dhasarathan
செப் 08, 2024 20:59

உள்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரே அவர் என்ன மாவு அரைத்துக்கொண்ட இருக்கிறார் ? வருடக்கணக்கில் அங்கு கலவரம், ஆனால் இங்கு பொய் ஜே பி யின் வழக்கமான பொய்கள், மணிப்பூர் அமைதி பூங்கா மற்றும் லக லக பிரதமர் அங்கு எட்டி பார்க்கக்கூட நேரம் இல்லை, உள்துறையின் தோல்வி


S.Martin Manoj
செப் 08, 2024 20:36

கலவரத்தை அடக்க முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் எதுக்கு பதவியில் இருக்கணும்? இன்னும் சில சாக்கடைகள் எதிர் கட்சிகளை குறை சொல்லிட்டு திரியுது .


p.s.mahadevan
செப் 08, 2024 13:14

மணிப்பூர் கலவரத்தை தீர்க்கவில்லை என்றால் பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டு பிம்பம் பாழாகிவிடும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 08, 2024 12:46

போயிட்டானுங்க, உக்ரைன் ருஷ்யா போரை நிப்பாட்ட ஹா, ஹா. கூரை ஏறி கோழியைப் பிடிக்க துப்பில்லே. வானம் ஏறி வைகுண்டம் போறானாம்


அதெல்லாம் முடியாது
செப் 08, 2024 12:17

ஆயுதம் தருவதே இந்த காங்கிரஸ் கட்சி தான் இவர்களுக்கு ஆயுதங்கள் எப்படி கிடைத்தது உள் நாட்டில் கலவரம் என்றால் இரு தரப்பும் கம்பு கட்டை கத்தி கொண்டு தாக்கி கொள்வார்கள் இவர்கள் நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குகிறார்களே இதிலிருந்தே தெரியவில்லை யார் கரணம் என்று காங்கிரஸ் கட்சியின் நோக்கமே இந்தியாவை அளிக்க வேண்டும் என்ற அவர்களது கொள்கையேதான்


வைகுண்டேஸ்வரன்
செப் 08, 2024 11:52

நிர்வாகம் செய்யத் தெரியாத தண்ட பிஜேபி அமைச்சரவை - மணிப்பூரிலும், ஒன்றியத்திலும். தமிழ் நாட்டில் ஏதோ ஒரு தனியார் பள்ளியில் பிரின்சிபாலின் உறவினர் டாக்டர் மாணவிகளிடம் தவறாக நடந்து கைதான செய்தியில், தமிழ்நாடு அரசை விமர்சித்த வாசகர்கள் எங்கே சார் போனீங்க? இந்த மணிப்பூர் கொடுமைகளுக்கு மட்டும் வேற காரணம். ஆனால் தமிழ் நாட்டில் இதை விட சிறிய குற்றங்கள் நடந்தாலும், விடியல், திராவிட மாடல், முதல்வர் எல்லோரையும் குறை சொல்லி எழுதுகிற ஆசாமிகள் எங்கேய்யா?


குண்டுராவ் சஹானி
செப் 08, 2024 09:05

உக்ரைனில் போரை நிறுத்திட்டுதான் உள்ளூரில் மறுவேலை.


Mario
செப் 08, 2024 08:42

நம்ம ஆளு எங்கே? மணிப்பூர் எப்ப போவாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை