மேலும் செய்திகள்
ரஞ்சித், பொற்கொடி உட்பட 1,500 பேர் மீது வழக்கு
11-Aug-2024
நொய்டா:பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி மகனைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே, பல்லா கிராமத்தில் வசிப்பவர் ஹரிகோவிந்த் பதி. பகுஜன் சமாஜ் கட்சியின் மீரட் மண்டல தலைவர். இவரது மகன் ராகுல் பதி. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, சூரஜ்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், பிரவேஷ் பதி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலை செய்யப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த கவுதம் புத்தா நகர் மாவட்ட நீதிபதி அவினாஷ் சக்சேனா, குற்றவாளி பிரவேஷ் பதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் பிரம்மாஜித் பதி ஆஜரானார்.
11-Aug-2024