உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜோக் நீர்வீழ்ச்சியில் தடை நீட்டிப்பு

ஜோக் நீர்வீழ்ச்சியில் தடை நீட்டிப்பு

ஷிவமொக்கா: உலக பிரசித்தி பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில், ஏப்ரல் 30 ம் தேதி வரை, சுற்றுலா பயணியருக்கு தடை உத்தரவை நீட்டித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஷிவமொக்கா மாவட்ட கலெக்டர் குருதத் ஹெக்டே வெளியிட்டுள்ள அறிக்கை:ஜோக் நீர் வீழ்ச்சி பகுதிகளில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. பணிகள் நடப்பதால், பொது மக்கள், சுற்றுலா பயணியருக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதால், ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரை, ஜோக் நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நீர் வீழ்ச்சியின் நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. இப்பகுதியில் மார்ச் 15க்குள் பணிகள் முடியும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடியவில்லை. எனவே ஏப்ரல் 30 வரை, ஜோக் நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணியர் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை